
தென் ஆப்பிரிக்காவில் நடந்து வந்த மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நாளை நடக்கும் இறுதிப் போட்டியுடன் முடிவடைகிறது. குரூப் ஏ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் பி பிரிவில் உள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளன. இதன் மூலம் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
ஆஸ்திரேலிய மகளிர் அணி:
அலைஸா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னெர், எலைஸ் பெர்ரி, டாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஜெஸ் ஜோனாசென், மேகான் ஸ்கட், டார்ஸி பிரௌன்.
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி:
லாரா வோல்வார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மாரிஸான் கேப், சுன் லூஸ் (கேப்டன்), க்ளோ ட்ரயான், நாடின் டி கிளெர்க், அனெகெ பாஷ், சினாலோ ஜாஃப்டா (விக்கெட் கீப்பர்), ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்கா காகா, நோன்குலுலெகோ லாபா.
நேற்று நடந்த 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதில், லாரா வோல்வார்ட் (53), டாஸ்மின் பிரிட்ஸ் (68) ஆகியோர் அதிரடி காட்டினர்.
வரலாற்றை திரும்பி பார்க்க வைத்த சச்சின்: ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் அடித்த நாள் இன்று!
எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீராங்கனைகள் டேனியல் வியாட் மற்றும் சோஃபியா டன்க்லி ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 53 ரன்கள் சேர்த்தனர். இதில், வியாட் 34 ரன்களில் ஆட்டமிழக்க, டன்க்லி 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த நாட் ஸ்கிவர் பிரண்ட் 40 ரன்களில் வெளியேறினார் மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
இந்தியா, இலங்கை இதை மட்டும் செய்தால் ஆஸ்திரேலியாவை யாராலும் காப்பாற்ற முடியாது!
இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முன்னதாக நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா 5 முறை சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்வின் தந்தை திடீர் மரணம்!
ஆனால், ஒரு முறை கூட தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இல்லை. கடந்த 2014 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியுடன் வெளியேறியது. இந்த நிலையில், தற்போது முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.