ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் என்று ஒவ்வொரு டீமா காலி செய்த சுப்மன் கில்: நெக்ஸ்ட் சிஎஸ்கேயா?

By Rsiva kumarFirst Published May 27, 2023, 10:35 AM IST
Highlights

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் அதிரடியாக ஆடி 129 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் கடைசி லீக் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டி நடக்குமா? நடக்காதா? என்று சந்தேகம் நிலவும் அளவிற்கு மழை கொட்டியது. ஒரு வழியாக மழை நிற்கவே, டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசியது.

கர்மா: தலைகீழாக மாறிய மும்பை இந்தியன்ஸ் போட்டி – எலிமினேட்டர் vs குவாலிஃபையர் 2!

கடைசி லீக் போட்டி: குஜராத் – பெங்களூரு:

அதன்படி முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கோலி மட்டும் அதிரடியாக ஆடி 101 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியாக ஆர்சிபி 197 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுப்மன் கில் அதிரடியாக ஆடி 102 ரன்கள் குவித்தார். விஜய் சங்கர் 53 ரன்கள் எடுத்தார். இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் 198 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆஃப் கனவு உறுதி செய்யப்பட்டது.

அடி மேல் அடி வாங்கி பரிதாபமாக வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்!

குவாலிஃபையர் 2 – மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்:

இதே போன்று நேற்று அகமதாபாத் மைதானத்தில் குவாலிஃபையர் 2ஆவது சுற்றுப் போட்டி நடந்தது. இதில் மழை குறுக்கீடு காரணமாக போட்டி நடக்குமா? என்ற சந்தேகமும் இருந்தது. கடைசியாக மழை நிற்கவும் போட்டி தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுப்மன் கில் அதிரடியாக ஆடி 129 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

சேப்பாக்கதை விட இரவில் ஜொலிக்கும் நரேந்திர மோடி மைதானம் – வைரலாகும் வீடியோ!

சுப்மன் கில் 30 ரன்கள் எடுத்திருந்த போது அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை டிம் டேவிட் கோட்டைவிட்டார். இதன் காரணமாக அவர் 129 ரன்கள் குவித்துள்ளார். சுப்மன் கில் சதம் அடித்த போது ரோகித் சர்மா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் 223 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டும் 61 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதில் கேமரூன் க்ரீன், இஷான் கிஷான், ரோகித் சர்மா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. கடைசியாக மும்பை அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது.

WTC இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகை அறிவிப்பு: முதல் பரிசு ரூ.13.2 கோடி, 2ஆம் பரிசு ரூ.6.5 கோடி!

முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெளியேற்றிய சுப்மன் கில், அடுத்ததாக சதம் அடித்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேற காரணமாக இருந்துள்ளார். இதையடுத்து அவர் சென்னை அணியை குறி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. வரும் 28 ஆம் தேதி நாளை இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது.

 

Narendra Modi Stadium during Qualifier 2.

One of the best stadiums in world. pic.twitter.com/czqds1kBRF

— Johns. (@CricCrazyJohns)

 

click me!