வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு 3 ஓவர்கள் மட்டுமே கொடுத்த கேப்டன் ரோகித் சர்மாவை முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர் விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஏற்கனவே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி பிரிஜ்டவுனில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
ஒருநாள் தொடரிலிருந்து விலகிய முகமது சிராஜ்? ஏன், என்ன காரணம் தெரியுமா?
அதன்படி முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் ஆடியது. முதல் ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அதன் பிறகு 3ஆவது ஓவர் மற்றும் 5ஆவது ஓவர் என்று மொத்தமாக 3 ஓவர்கள் தான் பந்து வீசினார். ஹர்திக் பாண்டியா வீசிய 2ஆவது ஓவரில் கைல் மேயர்ஸ், ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஹர்திக் பாண்டியா 3 ஓவர்களில் 17 ரன்கள் எடுக்கப்பட்டது. ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். அதன் பிறகு அவர் ஓவர் போட அழைக்கப்படவில்லை. முகேஷ் குமார் 5 ஓவர்களும், உம்ரான் மாலிக் 3 ஓவர்களும், ஷர்துல் தாக்கூர் 3 ஓவர்களும் வீசினார். முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தமே 14 ஓவர்கள் வீசினர். இதில், 70 ரன்கள் எடுக்கப்பட்டது. ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இணைந்து 9 ஓவர்கள் பந்து வீசினர். இதில், 43 ரன்கள் எடுக்கப்பட்டது.
ஜூன் 4 முதல் டி20 உலகக் கோப்பை: எந்தெந்த மைதானங்களில் நடக்கிறது தெரியுமா?
எனினும், இந்தப் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 118 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சனம் செய்துள்ளார்.
பொதுவாக ஒரு ஆல்ரவுண்டர் 3 ஓவர்களுக்கு மேலாக பந்து வீச வேண்டும். ஆனால், பாண்டியாவிற்கு 3 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் 5 முதல் 6 ஓவர்கள் வரையில் பந்து வீசுவதை நான் விரும்பினேன். எனினும், அவர் நன்றாக பந்து வீசினார். ஒரு ஓவரில் மட்டுமே அதிக ரன்கள் கொடுக்கப்பட்டது. மற்றபடி அவர் நன்றாகத்தான் பந்து வீசினார். புதிய பந்தில் உம்ரான் மாலிக் மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் சரியாக பந்து வீசவில்லை. உம்ரான் மாலிக் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் இடம் பெறவில்லை. ஆதலால், அவர் சிறப்பாக பந்து வீசவில்லை.
WI vs IND First ODI Live Score: சஞ்சு சாம்சனுடைய ஜெர்சியை அணிந்து வந்த சூர்யகுமார் யாதவ்!
ஹர்திக் பாண்டியாவிற்கு குறைந்தது 6 ஓவர்கள் வரையில் கொடுத்து, அக்ஷர் படேலை அணியில் இடம் பெறச் செய்ய வேண்டும். அக்ஷர் படேல் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். அவரது பந்து நன்றாக ஸ்விங் ஆகும். ஆகையால், இது இந்திய அணிக்கு பலம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறியுள்ளார்.