IRE vs IND T20 Series: அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்ற பும்ரா தலைமையிலான குழு!

By Rsiva kumar  |  First Published Aug 15, 2023, 4:00 PM IST

அயர்லாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.


வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்தது. இதில், முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் 2-2 என்று கைப்பற்றி சமனில் இருந்தன. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 5ஆவது டி20 போட்டி நேற்று முன் தினம் நடந்தது. இதில் இந்தியா முதலில் ஆடி 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தளபதி 68 படத்தில் விஜய் உடன் இணைந்து நடிக்கும் தோனி? அண்ணனா? வில்லனா?

Tap to resize

Latest Videos

பின்னர், ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 171 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும், 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது.

MS Dhoni: தோனி ஓய்வு பெற்று 3 ஆண்டுகள் நிறைவு: ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் போட்டியில் தோனி ரன் அவுட்!

வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா இடம் பெற்றுள்ளார். அதோடு, கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.

77th Independence Day: இந்திய விளையாட்டு அமைப்புகள் நாட்டு மக்களுக்கு எப்படி வாழ்த்து தெரிவித்தன?

இந்த தொடரானது வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில், ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணியின் ஒரு குழு தற்போது அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றது. இதில், பும்ரா, ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், திலக் வர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 18 ஆம் தேதி தொடங்குகிறது. 2ஆவது போட்டி 20 ஆம் தேதியும், 3ஆவது போட்டி 23 ஆம் தேதியும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Virat Kohli New House: 8 ஏக்கரில் பண்ணை வீடு கட்டும் பணியை தொடங்கிய விராத் கோலி அனுஷ்கா சர்மா!

 

Captain Jasprit Bumrah, Ruturaj Gaikwad and Prasidh Krishna.

The first batch has left for the Ireland series! pic.twitter.com/EaZluJorlE

— Mufaddal Vohra (@mufaddal_vohra)

 

click me!