மிஸ்டர் அஃப்ரிடி & அக்தர் உங்க வேலையை நீங்க பாருங்க.! எப்ப ஓய்வு பெறணும்னு கோலிக்கு தெரியும்

By karthikeyan VFirst Published Sep 15, 2022, 2:21 PM IST
Highlights

விராட் கோலியின் ஓய்வு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அதிக அக்கறையுடன் பேசி வாங்கி கட்டிக்கொள்கின்றனர்.
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக பெரிய ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவந்தார்.

2019ம் ஆண்டு நவம்பருக்கு பின் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறிவந்த விராட் கோலி, அண்மையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 71வது சதத்தை விளாசினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் முதல் சதம் இதுதான். 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்..! இளம் வீரருக்கு ஓபனிங் பேட்டிங்கை விட்டுக்கொடுக்கும் ரோஹித்

3 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி சதம் அடித்திருப்பதால் டி20 உலக கோப்பையில் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு  நிலவுகிறது. இந்த சதத்தின் மூலம் விராட் கோலி மீண்டும் தனது சாதனை பயணத்தை தொடங்கிவிட்டார் என்றே பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சதமடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி, சச்சினுக்கு அடுத்த 2ம் இடத்தை பிடித்துவிடுவார்.

விராட் கோலியின் சதம் அவருக்கும் இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் பெரிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்திருக்கிறது. விராட் கோலியிடமிருந்து 3 விதமான போட்டிகளிலும் இன்னும் பல சதங்களும் சாதனைகளும் எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி 3 ஆண்டுகளுக்கு பிறகு சதமடித்து மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ள நிலையில், அக்கறையாக பேசுவதாக நினைத்து விராட் கோலியின் ஓய்வு குறித்து பேசி, பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஷாஹித் அஃப்ரிடி மற்றும் ஷோயப் அக்தர் ஆகிய இருவரும் வாங்கிக்கட்டிக்கொள்கின்றனர்.

விராட் கோலி மீது அக்கறையாக கூறுவதாக நினைத்து பேசிய அஃப்ரிடி, கோலி ஒரு சாம்பியன் பிளேயர். ஆனால் ஓய்வு நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தால் கெரியரின் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வுபெற்றுவிடுவது நல்லது என்று கூறியிருந்தார்.

அதாவது அவருக்கு நல்ல பெயர் இருக்கும்போதே கெரியரின் உச்சத்தில் இருக்கும்போது ஓய்வுபெற்றுவிடவேண்டும். அதைவிடுத்து மோசமான ஃபார்முக்கு சென்று விமர்சனங்களுக்குள்ளாகி ஓய்வுபெறக்கூடாது என்பதுதான் அஃப்ரிடி கருத்தின் சாராம்சம். ஆனால் எப்போது ஓய்வுபெற வேண்டும் என்பது கோலிக்கு தெரியும் அல்லவா..? அதை சுட்டிக்காட்டி ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் அஃப்ரிடிக்கு பதிலடி கொடுத்துவருகின்றனர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை எடுக்காதது ஏன்..? தேர்வாளர் விளக்கம்

சில வீரர்கள் ஒருமுறை தான் ஓய்வுபெறுவார்கள் என்று அஃப்ரிடிக்கு அமித் மிஷ்ரா பதிலடி கொடுத்துள்ளார். அஃப்ரிடி சிலமுறை ஓய்வுபெறுவதாக அறிவித்துவிட்டு, பின்னர் அதை வாபஸ் பெற்றுக்கொண்டு மீண்டும் கிரிக்கெட் ஆடியவர். அதை சுட்டிக்காட்டி அஃப்ரிடியின் மூக்கை உடைத்துள்ளார் அமித் மிஷ்ரா.

அதேபோல, விராட் கோலி அக்டோபர் -நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவார் என்று கருத்து கூறிய அக்தரையும் ரசிகர்கள் விளாசிவருகின்றனர்.
 

click me!