ஐசிசி முன்னாள் எலைட் கிரிக்கெட் அம்பயர் ஆசாத் ரவூஃப் காலமானார்

By karthikeyan VFirst Published Sep 15, 2022, 11:51 AM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட்டில் அம்பயராக பணியாற்றி ஓய்வுபெற்ற பாகிஸ்தானை சேர்ந்த ஆசாத் ரவூஃப் காலமானார். அவருக்கு வயது 66.
 

பாகிஸ்தானை சேர்ந்த ஆசாத் ரவூஃப், முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அம்பயராகவும் பணிபுரிந்திருக்கிறார். அவர் ஒரு கிரிக்கெட் வீரராக அறியப்பட்டதைவிட, அம்பயராகத்தான் பிரபலமானார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 64 டெஸ்ட், 139 ஒருநாள் மற்றும் 28 டி20 போட்டிகளில் அம்பயராக பணியாற்றியுள்ளார். 64 டெஸ்ட்டில் 49ல் கள நடுவராகவும், 15 டெஸ்ட்டில் டிவி அம்பயராகவும் பணியாற்றியுள்ளார்.

இதையும் படிங்க  - முதல்ல அவரை ஆடவிடுங்க; அதுக்கு அப்புறம் விமர்சிங்க! T20 WC இந்திய அணியில் இடம்பிடித்த வீரருக்கு கவாஸ்கர் ஆதரவு

ஐபிஎல் போட்டிகள் உட்பட 40 முதல் தர போட்டிகள், 26 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் பணியாற்றியுள்ளார்.

2004-2010 காலக்கட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் மிக பிரபலமான அம்பயராக திகழ்ந்தார். ஐசிசி எலைட் பேனல் அம்பயராக இருந்த ஆசாத் ரவூஃப், ஐபிஎல்லில் சூதாட்ட புகாரில் சிக்கினார்.

இதுதொடர்பான விசாரணையில் 2016ம் ஆண்டு அவர் மீதான சூதாட்ட புகார் உறுதியானதையடுத்து அவருக்கு பிசிசிஐ தடை விதித்தது. 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை எடுக்காதது ஏன்..? தேர்வாளர் விளக்கம்

அதன்பின்னர் அம்பயரிங் செய்யாத ஆசாத் ரவூஃப், அம்பயரிங்கிலிருந்து ஓய்வுபெற்றார். இந்நிலையில் 66 வயதான ஆசாத் ரவூஃப் காலமானார். அவரது இறப்பை அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, ஆசாத் ரவூஃப் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் வீரர்கள், அம்பயர்கள் பலரும் ஆசாத் ரவூஃப் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
 

click me!