virat kohli retirement: விராட் கோலி விரைவில் ஓய்வு? புதிர் போட்ட முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்

By Pothy Raj  |  First Published Sep 14, 2022, 3:38 PM IST

ஆஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஓய்வு பெறுவார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் கணித்துள்ளார்.


ஆஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஓய்வு பெறுவார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் கணித்துள்ளார்.

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியை பறித்தபின், டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்தும் விராட் கோலி விலகினார். கேப்டன் பதவி பறிக்கப்பட்டபின் சாதாரண வீராரக விளையாடி வந்த விராட் கோலி, கடந்த சில மாதங்களில் பெரிதாக எந்த இன்னிங்ஸும் ஆடவில்லை.

Latest Videos

undefined

4 ஓவரில் 3 ரன் கொடுத்து 4 விக்கெட்; விண்டேஜ் ஜெயசூரியா கம்பேக்! இங்கி.,யை வீழ்த்தி இலங்கை லெஜண்ட்ஸ் அபாரவெற்றி

ஆசியக் கோப்பையில்தான் நீண்ட காலத்துக்குப்பின் ஆப்கானிஸ்தானுக்குஎதிராக சதம் அடித்து கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பி்யுள்ளார். ஏறக்குறைய ஓர் ஆண்டாக சதம் அடிக்காமல் இருந்து வந்த கோலி இப்போது சதம் அடித்துள்ளார். கேப்டன் பதவி பறிக்குப்பின் கோலியின் ஃபார்ம் மீது பல விமர்சனங்கள் எழுந்தன. அதை முறியடிக்கும் வகையில் விளையாடவும் கோலி தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் கோலி அணியில் இடம் பெற்றிருப்பதால், அவரின்ஆட்டம் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

டுவிட்டரில் 5 கோடி ஃபாலோயர்களை பெற்ற முதல் கிரிக்கெட்டர் விராட் கோலி..! இதிலும் சாதனை

இந்நிலையில் ஆசியக் கோப்பைப் போட்டியின்போது, இந்தியா.காம், கிரிக்கெட் கன்ட்டரி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் பங்கேற்றார் அப்போது அவர் கூறுகையில் “ விராட் கோலியின் ஃபார்ம், திறமை கடந்த சில ஆண்டுகளாகவே விமர்சனத்துக்கும், கேள்விக்கும் உள்ளாகி வருகிறது. ஆதலால், ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் விராட் கோலி டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார் எனத் தெரிகிறது.

ஆனால், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தொடர்ந்து விளையாடலாம். ஒருவேளா நான் விராட் கோலியாக இருந்தால், பெரிதாக சாதித்துவிட்டு ஓய்வு குறித்து அறிவிப்பேன். 

பாகிஸ்தான் அணி மீண்டும் சரியான தேர்ந்தெடுக்கப்படாத வீரர்களுடன் ஆசியக் கோப்பையில் விளையாடியது. சிறந்த ஃபினிஷரான முகமது ரிஸ்வான் ஆட்டம் மீது ஆசியக் கோப்பையில் பெரிய கேள்வி எழுந்துள்ளது, அவருக்கு மற்ற வீரர்களிடம் இருந்து ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சில வீரர்களுக்கு ஓய்வு..!

ரிஸ்வான் நன்றாக பேட் செய்தபோதிலும் அவரால் ஆட்டத்தை முடிக்கமுடியவில்லை.அதுதான் இந்தமுறை பெரிய சிக்கலாக அமைந்தது. பாகிஸ்தான் மோசமான கிரிக்கெட்டை விளையாடியதாக நான் நினைக்கிறேன். டாஸ் வென்றதும் முதலில் பேட் செய்திருக்க வேண்டும். அவர்களின் திட்டம் என்ன என்று தெரியவில்லை

இவ்வாறு ஷோயப் அக்தர் தெரிவித்தார்
 

click me!