4 ஓவரில் 3 ரன் கொடுத்து 4 விக்கெட்; விண்டேஜ் ஜெயசூரியா கம்பேக்! இங்கி.,யை வீழ்த்தி இலங்கை லெஜண்ட்ஸ் அபாரவெற்றி

Published : Sep 13, 2022, 10:50 PM IST
4 ஓவரில் 3 ரன் கொடுத்து 4 விக்கெட்; விண்டேஜ் ஜெயசூரியா கம்பேக்! இங்கி.,யை வீழ்த்தி இலங்கை லெஜண்ட்ஸ் அபாரவெற்றி

சுருக்கம்

சாலை பாதுகாப்பு டி20 தொடரில் இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியை  விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.  

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடும் சாலை பாதுகாப்பு டி20 லீக் தொடர் கான்பூரில் நடந்துவருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகளின் முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு ஆடுகின்றனர்.

இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. கான்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிங்க - முதல்ல அவரை ஆடவிடுங்க; அதுக்கு அப்புறம் விமர்சிங்க! T20 WC இந்திய அணியில் இடம்பிடித்த வீரருக்கு கவாஸ்கர் ஆதரவு

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். குறிப்பாக இலங்கை முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூரியாவின் சுழலில் மண்டியிட்டு சரணடைந்தனர். 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விண்டேஜ் ஜெயசூரியாவை பார்த்த மாதிரி இருந்தது. 

இதையும் படிங்க - T20 World Cup: அவங்க 2 பேருக்கு பதிலா இவங்க 2 பேர் தான் என் சாய்ஸ்! இந்திய அணி தேர்வை விமர்சிக்கும் அசாருதீன்

இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 79 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை லெஜண்ட்ஸ் அணி 15வது ஓவரில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

PREV
click me!

Recommended Stories

U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!
அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!