டுவிட்டரில் 5 கோடி ஃபாலோயர்களை பெற்ற முதல் கிரிக்கெட்டர் விராட் கோலி..! இதிலும் சாதனை

By karthikeyan VFirst Published Sep 13, 2022, 9:10 PM IST
Highlights

டுவிட்டரில் 50 கோடி ஃபாலோயர்களை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், 2019 நவம்பருக்கு பின் சதமே அடிக்காமல் இருந்துவந்தார்.

அதனால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட விராட் கோலி, ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி 3 ஆண்டுகளுக்கு பின் சதமடித்தார். அது விராட் கோலியின் 71வது சர்வதேச சதமாக இருந்தாலும்,  சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதுதான் கோலியின் முதல் சதம் ஆகும்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை எடுக்காதது ஏன்..? தேர்வாளர் விளக்கம்

இந்த சதத்தின் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்ததுடன் பல சாதனைகளையும் படைத்தார் கோலி. கிரிக்கெட்டில் மட்டுமல்லாது கிரிக்கெட்டுக்கு வெளியேயும் சாதனைகளை படைத்து, தான் ஒரு சாதனை நாயகன் என மீண்டும் மீண்டும் நிரூபித்துவருகிறார் கோலி.

விராட் கோலியை டுவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியை எட்டியுள்ளது. இதன்மூலம், டுவிட்டரில் 5 கோடி ஃபாலோயர்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 21.1 கோடி ஃபாலோயர்களை பெற்றுள்ள கோலி, சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை பெற்றுள்ள 3வது விளையாட்டு வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இந்த பட்டியலில் கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இருவரும் முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.

இதையும் படிங்க - T20 World Cup: அவங்க 2 பேருக்கு பதிலா இவங்க 2 பேர் தான் என் சாய்ஸ்! இந்திய அணி தேர்வை விமர்சிக்கும் அசாருதீன்

ஃபேஸ்புக்கில் 4.9 கோடி ஃபாலோயர்களை பெற்றுள்ள விராட் கோலி, சமூக வலைதளங்களில் மொத்தமாக 31 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்களை பெற்றுள்ளார்.
 

click me!