முதல்ல அவரை ஆடவிடுங்க; அதுக்கு அப்புறம் விமர்சிங்க! T20 WC இந்திய அணியில் இடம்பிடித்த வீரருக்கு கவாஸ்கர் ஆதரவு

By karthikeyan VFirst Published Sep 13, 2022, 8:25 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஃபாஸ்ட் பவுலர் ஹர்ஷல் படேலுக்கு ஆதரவாக சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
 

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பரில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

ஸ்டாண்ட்பை  வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

இதையும் படிங்க - பாகிஸ்தான் முன்னாள் வீரரே ஃபீல் பண்ணும் இந்திய வீரரின் புறக்கணிப்பு..! ரோஹித் சொன்னது ஒண்ணு.. செஞ்சது ஒண்ணு

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. ஷமி, ஷ்ரேயாஸ் ஐயரை மெயின் அணியில் எடுக்காதது, சஞ்சு சாம்சனை புறக்கணித்துவிட்டு ரிஷப் பண்ட், தீபக் ஹூடாவை எடுத்தது என பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. ஷமியை எடுக்காமல் ஹர்ஷல் படேலை எடுத்ததும் விமர்சனம் செய்யப்படுகிறது.

ஹர்ஷல் படேல் நல்ல வேகத்தில் வீசமாட்டார். அதனால் அவரது பவுலிங் ஆஸ்திரேலியாவில் அடித்து நொறுக்கப்படும். அவரது பவுலிங்கில் அதிக ரன்கள் அடிக்கப்படும் என்றெல்லாம் பேசப்படுகிறது.

இதையும் படிங்க - T20 World Cup: அவங்க 2 பேருக்கு பதிலா இவங்க 2 பேர் தான் என் சாய்ஸ்! இந்திய அணி தேர்வை விமர்சிக்கும் அசாருதீன்

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், டி20 உலக கோப்பை தொடங்கி நடக்கட்டும். ஹர்ஷல் படேல் பந்துவீசட்டும். தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, அவர் வேகமாக வீசுவதில்லை என்பதற்காக அவரது பவுலிங்கில் அதிக ரன்கள் அடிக்கப்படும் என்று எப்படி முடிவு செய்கிறீர்கள்? முதலில் அவர் பந்துவீசட்டும். அதன்பின் இப்படி, நடந்தது, அப்படி நடந்தது என்று பேசலாம் என்று ஹர்ஷல் படேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
 

click me!