
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று பிற்பகல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இதுவரையில் இந்தியாவில் நடந்த வந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று கம்பீரமாக இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.
இதே போன்று ஆஸ்திரேலியா விளையாடிய 10 போட்டிகளில் 8ல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இதில், முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அதன் பிறகு நடந்த எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது அரையிறுதிப் போட்டியில் த்ரில் வெற்றியோடு இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயரால் போட்டியை மாற்ற முடியும் – கவுதம் காம்பீர்!
அகமதாபாத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதே போன்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, முகமது கைஃப், சுரேஷ் ரெய்னா, வீரேந்திர சேவாக், கவுதம் காம்பீர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள், தவிர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும், கிரிக்கெட் பிரபலங்களின் மனைவிமார்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. இந்த நிலையில் தான், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும், யாகம் வளர்த்து வேண்டிக் கொண்டும் பக்தர்கள் வேண்டி கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.