
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும், மைதானம் குறித்து இரு அணி வீரர்களும் விமர்சனம் செய்தனர். பார்படாஸில் உள்ள பிரிஜ்டவுனில் நடந்த அதே மைதானத்தில் தான் இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டியும் நடந்தது.
இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக இஷான் கிஷான் 52 ரன்கள் சேர்த்தார். சுப்மன் கில் 34 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் வெளியேறினார். முதல் விக்கெட்டிற்கு 90 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி அடுத்து 23 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. 5 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்த நிலையில், 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
விட்டு விட்டு மழை; மீண்டும் வேலயை காட்டிய மைதானம்; இந்தியா 181க்கு ஆல் அவுட்!
பின்னர், எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் கேப்டன் ஷாய் ஹோப் பொறுப்பை உணர்ந்து விளையாடி 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு வீரர் கீசி கார்டி 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்தது.
பொறுப்பாக ஆடிய சுப்மன் கில், இஷான் கிஷான் அரைசதம்: மழையால் போட்டி பாதிப்பு!
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலிக்கு ரசிகை ஒருவர் பிரேஸ்லேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதனை விராட் கோலி தனது வலது கையில் அணிந்து கொள்ளும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் அக்ஷர் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
WI vs IND 2nd ODI: ரோகித், கோலிக்கு ஓய்வு, சாம்சன், அக்ஷருக்கு வாய்ப்பு: வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்!