இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடரை இந்தியா கைப்பற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் பாப் டூப்ளெசிஸ் கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2ஆவது போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது லீக் போட்டி நாளை 2ஆம் தேதி தொடங்குகிறது. இலங்கை, பல்லேகலே மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
டைமண்ட் லீக் தடகள போட்டி : ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா 2ஆவது இடம்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து தான் உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தியா நடத்தும் 13 ஆவது உலகக் கோப்பை தொடரானது வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து என்று 10 அணிகள் இடம் பெற்று 10 மைதானங்களில் போட்டி நடத்தப்படுகிறது.
ஷாஹீன் அஃப்ரிடி இருந்தால் என்ன, இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் – சவுரவ் கங்குலி!
வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரை எந்த அணி கைப்பற்றும் என்பது குறித்து தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் பாப் டூப்ளசிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்வராஜ் டிராக்டர்களின் பிராண்ட் அம்பாசிடராக தோனிக்கு வரவேற்பு- ஆனந்த் மஹிந்திரா!
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தென் ஆப்பிரிக்கா சிறந்த அணியாக இருக்கிறது. எனினும், இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினம். அதே போன்று தான், 5 முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவும் வலுவான அணியாக உள்ளது. இந்த 2 அணிகளை தாண்டி உலகக் கோப்பையை மற்ற அணிகளால் வெல்ல முடியாது என்று கூறியுள்ளார்.