தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 160 ரன்கள் அடித்து, 161 ரன்கள் என்ற சவாலான இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்துவரும் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜேஎஸ்கே கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி:
undefined
ரீஸா ஹென்ரிக்ஸ், ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), டோனவான் ஃபெராரியா, லியுஸ் டு ப்ளூய், சிபானெலோ மகான்யா, மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெஃபெர்டு, ஜெரால்ட் கோயெட்ஸீ, நாண்ட்ரே பர்கர், கைல் சிம்மண்ட்ஸ், மஹீஷ் தீக்ஷனா.
என் கெரியரில் நான் எதிர்கொண்டதிலேயே மிகக்கடினமான பவுலர் அவர்தான்..! ஜோஸ் பட்லர் ஓபன் டாக்
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி:
ஆடம் ரோஸிங்டன் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா, ஜோர்டான் ஹெர்மான், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஜேஜே ஸ்மட்ஸ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், மார்கோ யான்சென், சிசாண்டா மகளா, வாண்டர் மெர்வி, பிரைடான் கார்ச், ஜேம்ஸ் ஃபுல்லர்.
முதலில் பேட்டிங் ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஃபாஃப் டுப்ளெசிஸ் மற்றும் ரீஸா ஹென்ரிக்ஸ் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 14.2 ஓவரில் 119 ரன்களை குவித்தனர். ரீஸா ஹென்ரிக்ஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்து டுப்ளெசிஸ் ஒரு முனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆட, மறுமுனையில் மேத்யூ வேட்(7), ஃபெரைரா(2), ப்ளூய்(5), ரொமாரியோ ஷெஃபெர்ட் (2) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் மளமளவென ஆட்டமிழந்தனர்.
IND vs AUS: ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிரான இந்திய அணியின் அஸ்திரம் இவர் தான்..! இர்ஃபான் பதான் அதிரடி
அபாரமாக ஆடி 61 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்த டுப்ளெசிஸ் 8 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். டுப்ளெசிஸின் அபாரமான பேட்டிங்கால் 20 ஓவரில் 160 ரன்கள் அடித்த ஜேஎஸ்கே அணி, 161 ரன்கள் என்ற சவாலான இலக்கை சன்ரைசர்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.