தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. புள்ளி பட்டியலில் முதல் 4 இங்களில் இருக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இதுவரை 8 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பிரிட்டோரியா அணிக்கு இன்னும் 2 போட்டிகள் எஞ்சியிருப்பதால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும். தலா 9 போட்டிகளில் ஆடி 4 வெற்றிகளை பெற்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் அடுத்த 2 இடங்களில் உள்ளன.
என் கெரியரில் நான் எதிர்கொண்டதிலேயே மிகக்கடினமான பவுலர் அவர்தான்..! ஜோஸ் பட்லர் ஓபன் டாக்
8 போட்டிகளில் ஆடி 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்பை எதிர்கொள்கிறது. ஜோஹன்னஸ்பர்க்கில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜேஎஸ்கே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டி தான் சன்ரைசர்ஸ் அணிக்கு லீக்கில் கடைசி போட்டி. ஆனால் ஜேஎஸ்கே அணிக்கு இதற்கு பின் மற்றொரு போட்டி இருக்கிறது. இரு அணிகளுக்குமே இது முக்கியமான போட்டி.
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி:
ரீஸா ஹென்ரிக்ஸ், ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), டோனவான் ஃபெராரியா, லியுஸ் டு ப்ளூய், சிபானெலோ மகான்யா, மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெஃபெர்டு, ஜெரால்ட் கோயெட்ஸீ, நாண்ட்ரே பர்கர், கைல் சிம்மண்ட்ஸ், மஹீஷ் தீக்ஷனா.
IND vs AUS: ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிரான இந்திய அணியின் அஸ்திரம் இவர் தான்..! இர்ஃபான் பதான் அதிரடி
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி:
ஆடம் ரோஸிங்டன் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா, ஜோர்டான் ஹெர்மான், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஜேஜே ஸ்மட்ஸ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், மார்கோ யான்சென், சிசாண்டா மகளா, வாண்டர் மெர்வி, பிரைடான் கார்ச், ஜேம்ஸ் ஃபுல்லர்.