மகளிருக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்!

Published : Feb 05, 2023, 04:51 PM IST
மகளிருக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்!

சுருக்கம்

வரும் 10 ஆம் தேதி தொடங்கும் மகளிருக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை டி20 தொடருக்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதல் பயிற்சி ஆட்டத்தில் மோதுகின்றன.  

மகளிருக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் வரும் 10 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், அயர்லாந்து, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என்று மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. 

இந்த தொடரில் மொத்தம் 23 போட்டிகள் நடக்கிறது. மொத்தம் உள்ள 10 அணியும் குரூப் ஏ, குரூப் பி என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் 4 போட்டிகளில் விளையாட வேண்டும். ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதன் பிறகு 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுகளில் போட்டி போடும். கடந்த முறை டைட்டில் வென்ற ஆஸ்திரேலியா இந்த முறையும் வெற்றி பெறும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

இதுவரையில் ஆஸ்திரேலியா 5 முறையும், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா ஒரு முறையும் ஐசிசி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளன. இந்தியா இதுவரையில் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றவில்லை. இந்த முறை ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இந்த முறை டி20 உலகக் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை:

குரூப் - ஏ

ஆஸ்திரேலியா
வங்கதேசம் 
நியூசிலாந்து
தென்னாப்பிரிக்கா
இலங்கை

குரூப் - பி

இங்கிலாந்து
இந்தியா
பாகிஸ்தான்
அயர்லாந்து
மேற்கிந்திய தீவுகள் 

டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தகுதிபெற்ற 10 அணிகளும் தலா 2 பயிற்சி போட்டிகளில் விளையாடும். இந்தப் பயிற்சி போட்டி நாளையும், 8ஆம் தேதியும் நடக்க இருக்கிறது. இந்திய அணிக்கான பயிற்சி போட்டி நாளை நடக்கிறது. இதில், ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதையடுத்து வரும், 8 ஆம் தேதி நடக்கும் 2ஆவது பயிற்சி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை வார்ம்-அப் போட்டிகள்:

பிப்ரவரி 6 திங்கள்கிழமை

இலங்கை  vs அயர்லாந்து  - பிற்பகல் 1:30

நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் - பிற்பகல் 1:30

தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து - மாலை 6:00 மணி

ஆஸ்திரேலியா vs இந்தியா - மாலை 6:00 மணி

பாகிஸ்தான் vs பங்களாதேஷ் - மாலை 6:00 மணி

பிப்ரவரி 8 புதன்கிழமை

அயர்லாந்து vs ஆஸ்திரேலியா - பிற்பகல் 1:30

இங்கிலாந்து vs நியூசிலாந்து - பிற்பகல் 1:30

பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா - மாலை 6:00 மணி

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா - மாலை 6:00 மணி

பங்களாதேஷ் vs இந்தியா - மாலை 6:00 மணி

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

Galle Test: 462 ரன்கள் குவித்த இந்தியா... சரசரவென சரிந்த இலங்கை டாப் ஆர்டர்..!
Yashasvi Jaiswal: வைபவ் வந்ததும் ஜெய்ஸ்வாலை கழட்டிவிடும் RR..? MI உடன் மெகா டிரேட் டீல்..?