6 பந்தில் 6 சிக்ஸர்கள்.. சீனியர் பவுலரை தெறிக்கவிட்ட இஃப்டிகார் அகமது..! வைரல் வீடியோ

Published : Feb 05, 2023, 06:20 PM IST
6 பந்தில் 6 சிக்ஸர்கள்.. சீனியர் பவுலரை தெறிக்கவிட்ட இஃப்டிகார் அகமது..! வைரல் வீடியோ

சுருக்கம்

பாகிஸ்தான் சூப்பர் லீக் முன்னோட்ட போட்டியில் பெஷாவர் ஸால்மிக்கு எதிராக 6 பந்தில் 6 சிக்ஸர்களை விளாசி மிரட்டினார் இஃப்டிகார் அகமது. அந்த வீடியோ வைரலாகிவருகிறது.   

பாகிஸ்தான் சூப்பர் லீக்  தொடர் வரும் 13ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக முன்னோட்ட போட்டிகள் நடந்துவருகின்றன. குவெட்டா கிளாடியேட்டர்ஸ் - பெஷாவர் ஸால்மி இடையே போட்டி நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி கேப்டன் பாபர் அசாம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவரில் 184 ரன்கள் அடித்தது. 19 ஓவரில் 148 ரன்கள் மட்டுமே அடித்திருந்த குவெட்டா அணி 20 ஓவரில் 184 ரன்களை குவித்தது.

என் கெரியரில் நான் எதிர்கொண்டதிலேயே மிகக்கடினமான பவுலர் அவர்தான்..! ஜோஸ் பட்லர் ஓபன் டாக்

அதற்கு காரணம், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி வீரர் இஃப்டிகார் அகமது ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். 42 பந்தில் அரைசதம் அடித்து களத்தில் இருந்த இஃப்டிகார் அகமது, பெஷாவர் ஸால்மி அணி பவுலரும் சீனியர் ஃபாஸ்ட் பவுலருமான வஹாப் ரியாஸ் வீசிய கடைசி ஓவரின் 6 பந்திலும் சிக்ஸர்கள் அடித்தார். இதன்மூலம் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து இந்த சாதனையை செய்த எலைட் லிஸ்ட்டில் இணைந்தார்.

IND vs AUS: ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிரான இந்திய அணியின் அஸ்திரம் இவர் தான்..! இர்ஃபான் பதான் அதிரடி

42 பந்தில் அரைசதம் அடித்த இஃப்டிகார் அகமது, 50 பந்தில் 94 ரன்களை குவித்தார். இஃப்டிகார் அகமது 6 பந்தில் 6 சிக்ஸர்கள் அடித்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!