இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியானது 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்று கைப்பற்றியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியானது 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி மும்பையில் நடந்தது.
இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மட்டுமே பொறுமையாக விளையாடி 30 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்மிருதி மந்தனா 10 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் ஒற்றைப் பட்டை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய மகளிர் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய மகளிர் அணி:
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, ஷ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்த்ரேகர், டைட்டஸ் சாது, ரேணுகா தாகூர் சிங், சைகா இஷாக்.
இங்கிலாந்து மகளிர் அணி:
டேனியல் வியாட், சோபியா டங்க்லி, ஆலிஸ் கேப்ஸி, நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹீதர் நைட் (கேப்டன்), ஆமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), ஃப்ரேயா கெம்ப், சோஃபி எக்லெஸ்டோன், சாரா கிளான், லாரன் பெல், சார்லோட் டீன்.
இங்கிலாந்து மகளிர் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் சார்லோட் டீன், லாரன் பெல், சோஃபி எக்லெஸ்டோன், சாரா கிளென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஃப்ரேயா கெம்ப் மற்றும் நாட் ஸ்கிவர் பிரண்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்தியை இங்கிலாந்து மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகள் சோஃபியா டங்க்லி மற்றும் டேனியல் வியாட் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆலிஸ் கேப்ஸி மற்றும் நாட் ஸ்கிவர் பிரண்ட் இருவரும் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். கேப்ஸி 25 ரன்களில் ஆட்டமிழக்க, பிரண்ட் 16 ரன்களில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் எமி ஜோன்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஃப்ரேயா கெம்ப் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் ஹீதர் நைட் 7 ரன்கள் எடுக்க, சோஃபி எக்லெஸ்டோன் 9 ரன்கள் சேர்க்கவே இங்கிலாந்து மகளிர் அணி 11.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்ட வேதா கிருஷ்ணமூர்த்தி: குஜராத் ஜெயிண்ட்ஸ் வீராங்கனைகளின் முழு லிஸ்ட்!