டி20 உலக கோப்பை: இங்கிலாந்து - ஆஃப்கானிஸ்தான் பலப்பரீட்சை.. டாஸ் ரிப்போர்ட்

Published : Oct 22, 2022, 04:27 PM ISTUpdated : Oct 22, 2022, 04:34 PM IST
டி20 உலக கோப்பை: இங்கிலாந்து - ஆஃப்கானிஸ்தான் பலப்பரீட்சை.. டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் 2வது போட்டியில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்று தொடங்கியுள்ளன. இன்று க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடக்கின்றன. சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதிய முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பெர்த்தில் நடக்கும் அடுத்த போட்டியில் இங்கிலாந்தும் ஆஃப்கானிஸ்தானும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க- டி20 உலக கோப்பை: தினேஷ் கார்த்திக் வேண்டாம்.. ரிஷப் பண்ட் தான் சரியாக இருப்பார்.! கம்பீர் கூறும் சரியான காரணம்

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், மார்க் உட். 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்..! கௌதம் கம்பீரின் தேர்வு

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜட்ரான், உஸ்மான் கனி, நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி(கேப்டன்), அஸ்மதுல்லா ஓமர்ஸாய், ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான், ஃபரீத் அகமது மாலிக், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.
 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?