2023 ஆசிய கோப்பையில் ஆட பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது - ஜெய் ஷா..! மௌனம் கலைத்த கேப்டன் ரோஹித் சர்மா

By karthikeyan VFirst Published Oct 22, 2022, 4:00 PM IST
Highlights

2023 ஆசிய கோப்பையில் கலந்துகொள்ள இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கருத்து கூறியிருந்த நிலையில், அதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசியிருக்கிறார்.
 

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றுதான் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்கியது. நாளை மெல்பர்னில் நடக்கும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

நாளை பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதவுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம்,  2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் திட்டமிடப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் நடந்தால் இந்திய அணி அங்கு செல்லாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசியது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவரும் பதிலளித்தார்.

இதையும் படிங்க- டி20 உலக கோப்பை: தினேஷ் கார்த்திக் வேண்டாம்.. ரிஷப் பண்ட் தான் சரியாக இருப்பார்.! கம்பீர் கூறும் சரியான காரணம்

அடுத்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ள நிலையில், ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வதில் இந்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இந்நிலையில், இதுகுறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். 2023 ஆசிய கோப்பை பொதுவான ஒரு இடத்தில் நடத்தப்படும் என்று ஜெய் ஷா கூறினார்.

ஜெய் ஷாவின் கருத்தால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து ஆட மறுத்தால் 2023ல் இந்தியாவில் நடத்தப்படும் ஒருநாள் உலக கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று தெரிவித்தது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி எதிர்கொள்ளும் அணிகள் இவைதான்.! முழு போட்டி விவரம்

இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய ரோஹித் சர்மா, எங்கள் கவனம் முழுக்க இந்த உலக கோப்பையில் உள்ளது. இதுதான் இப்போதைக்கு எங்களுக்கு முக்கியம். எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. அந்த விவகாரத்தில் பிசிசிஐ முடிவுகளை எடுக்கும். நாங்கள் நாளை நடக்கும் போட்டியின் மீது மட்டுமே கவனம் செலுத்துவோம் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.
 

click me!