#INDvsENG முதல் டெஸ்ட்: இந்திய அணியில் 2 தமிழ் பாய்ஸ்..! டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்

Published : Feb 05, 2021, 09:37 AM IST
#INDvsENG முதல் டெஸ்ட்: இந்திய அணியில் 2 தமிழ் பாய்ஸ்..! டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  

இந்தியா இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் இன்று சென்னையில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுக்கு இது 100வது டெஸ்ட் போட்டி. தனது 100வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சென்னை டெஸ்ட்டில், முக்கியமான டாஸை வென்றுள்ளார் ஜோ ரூட்.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி காயத்தால் நேற்று விலகியதையடுத்து, டோமினிக் சிப்ளி மற்றும் ரோரி பர்ன்ஸ் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குகிறார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக ஜிம்மி ஆண்டர்சனும் ஜோஃப்ரா ஆர்ச்சரும் சேர்க்கப்பட்டுள்ளனர். சீனியர் பவுலரும் ஆண்டர்சனின் ஆதர்ச ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியுமான ஸ்டூவர்ட் பிராட் அணியில் சேர்க்கப்படவில்லை. 

இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, டேனியல் லாரன்ஸ், ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஓலி போப், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), டோமினிக் பெஸ், ஜாக் லீச், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜிம்மி ஆண்டர்சன்.

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் என்பதை நேற்றே உறுதிசெய்திருந்தார் கேப்டன் கோலி. இந்திய அணி 3 ஸ்பின்னர்கள் மற்றும் 2 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடுகிறது. ஸ்பின்னர்களாக சென்னை மண்ணின் மைந்தர்கள் அஷ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவருடன் ஷபாஸ் நதீமும் சேர்க்கப்பட்டுள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ராவும் இஷாந்த் சர்மாவும் ஆடுகின்றனர்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அஷ்வின், ஷபாஸ் நதீம், பும்ரா, இஷாந்த் சர்மா.
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி