PAK vs ENG: 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..! ஆடும் லெவனில் ஒரு அதிரடி மாற்றம்

Published : Dec 08, 2022, 09:57 PM IST
PAK vs ENG: 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..! ஆடும் லெவனில் ஒரு அதிரடி மாற்றம்

சுருக்கம்

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடும் லெவனில் ஒரு அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

2வது டெஸ்ட் போட்டி முல்தானில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியிலும் ஜெயித்து டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 5ம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி, இந்த போட்டியில் ஜெயித்து அதிக வெற்றி சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முன்னேறும் முனைப்பில் களமிறங்குகிறது.

BAN vs IND: 3 வீரர்கள் விலகல்.. 3வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி

முல்தானில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் ஒரு அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லியாம் லிவிங்ஸ்டோனுக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவன் ODI கிரிக்கெட்டில் என்னத்த சாதிச்சான்னு அவனை டீம்ல எடுத்தீங்க..? இந்திய அணி தேர்வை விளாசிய முன்னாள் வீரர்

இங்கிலாந்து அணி:

ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ஆலி ராபின்சன், ஜாக் லீச், மார்க் உட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
 

PREV
click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்