இந்தியாவிற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் பென் டக்கெட் அதிரடியால் இங்கிலாந்து 207 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா அதிகபட்சமாக 131 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுக்க, சர்ஃபராஸ் கான் 62 ரன்கள் சேர்த்தார். கடைசியாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்தது.
Ashwin 500 – அஸ்வினின் மாயாஜால சுழலுக்கு வாழ்த்துகள் - மு.க.ஸ்டாலின்!
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர். இதில், கிராவ்லி 15 ரன்களில் அஸ்வின் பந்தில் வெளியேற, பென் டக்கெட் பவுண்டரி, பவுண்டரியாக விளாச இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
ஒரு கட்டத்தில் டக்கெட் 88 பந்துகளில் 102 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக வெளி மண்ணில் அதிவேகமாக சதம் அடித்த வீரர்களில் பென் டக்கெட் 3ஆவது இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக ஆடம் கில்கிறிஸ்ட் 84 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதே போன்று, 85 பந்துகளில் கிளைவ் லாயிட் சதம் விளாசியுள்ளார். இவரைத் தொடர்ந்து 99 பந்துகளில் ராஸ் டெயிலர் சதம் விளாசியுள்ளார்.
Ashwin 500 Wickets: எங்களை பெருமைப்படுத்தியதற்கு நன்றி – அஸ்வினுக்கு நடிகர் தனுஷ் பாராட்டு!
இந்த நிலையில் ஒரே செஷனில் அதிக ரன்கள் குவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் 109 ரன்கள் சாதனையை பென் டக்கெட் 114 ரன்கள் எடுத்து முறியடித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்தியா வந்து ஒரு செஷனில் 100 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக விரேந்திர சேவாக் 108 ரன்களும், கருண் நாயர் 108 ரன்களும் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி தமிழக வீரர் அஸ்வின் சாதனை!
இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாது 2 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்துள்ளது. இதில், பென் டக்கெட் 118 பந்துகளில் 21 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 133 ரன்களுடனும், ஜோ ரூட் 9 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். ஜாக் கிராவ்லி விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.