Ashwin 500 Wickets: எங்களை பெருமைப்படுத்தியதற்கு நன்றி – அஸ்வினுக்கு நடிகர் தனுஷ் பாராட்டு!

By Rsiva kumar  |  First Published Feb 16, 2024, 4:24 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றி 500 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நடிகர் தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.


இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1-1 என்று கைப்பற்றின. 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் விக்கெட் கைப்பற்றாத நிலையில், 2ஆவது இன்னிங்ஸில்3 விக்கெட்டுகள் கைப்பற்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 499 விக்கெட்டுகள் கைப்பற்றி கடைசி ஒரு விக்கெட்டிற்காக கடுமையாக போராடியும் பலன் இல்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி தமிழக வீரர் அஸ்வின் சாதனை!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் மூலமாக தனது 98ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 131, ரவீந்திர ஜடேஜா 112, சர்ஃபராஸ் கான் 62, துருவ் ஜூரெல் 46 மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 37 ரன்கள் எடுத்தனர். பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை விளையாடியது. இதில், ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், அஸ்வின் செய்த தவறால் இங்கிலாந்து அணி 5 ரன்களுடன் பேட்டிங்கை தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாட ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

ரோகித், ஜடேஜா செஞ்சூரி, அஸ்வின் – ஜூரேல் பார்ட்னர்ஷிப், பும்ராவின் அதிரடியால் இந்தியா 445 ரன்கள் குவிப்பு!

பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் பந்து வீசியும் விக்கெட் விழவில்லை. 11 ஓவர்கள் வரையில் பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் மாறி மாறி பந்து வீசினர். இதையடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் 12ஆவது ஓவர் வீசுவதற்கு வரவழைக்கப்பட்டார். இந்த ஓவரில் 3 ரன்கள் கொடுக்க மீண்டும் 14ஆவது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் முதல் பந்திலேயே ஜாக் கிராவ்லி விக்கெட்டை கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500ஆவது விக்கெட்டை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

Sarfaraz Khan: பெற்றோருக்கு பெருமை சேர்த்த சர்ஃபராஸ் கான் – வைரலாகும் வீடியோ!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் தமிழக வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். மேலும், 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக அனில் கும்ப்ளே 105 போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

 

Moment when Ravi Ashwin reached his 500th Test wicket. 🐐 pic.twitter.com/MUlGtPgm9c

— Mufaddal Vohra (@mufaddal_vohra)

 

மேலும், முத்தையா முரளிதரன் (87 டெஸ்ட்), ரவிச்சந்திரன் அஸ்வின் (98), அனில் கும்ப்ளே (105), ஷேன் வார்னே (108), கிளென் மெக்ராத் (110) ஆகியோர் 500 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர். அதோடு, 500 விக்கெட்டுகள் கைப்பற்றுவதற்கு அஸ்வின் 25,714 பந்துகள் வீசியுள்ளார்.

அறிமுக போட்டியிலேயே மோசமான சாதனை - முதலிடம் பிடித்த சர்ஃபராஸ் கான்!

அதிக பந்துகள் வீசி 500 விக்கெட்டுகள் எடுத்தவர்கள்:

25528 – கிளென் மெக்ராத்

25714 – ரவிச்சந்திரன் அஸ்வின்

28150 – ஜேம்ஸ் ஆண்டர்சன்

28430 – ஸ்டூவர்ட் போர்டு

28833 – கோர்ட்னி வால்ஸ்

இந்த நிலையில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நடிகர் தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: இந்த அசாத்திய சாதனையை நிகழ்த்திய அஸ்வினுக்கு வாழ்த்துக்கள். எங்களை பெருமைப்படுத்தியதற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Congratulations on this incredible achievement. Thank you for making us proud

— Dhanush (@dhanushkraja)

 

Ashwin is the fastest to complete 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450, 500 wickets for India in Tests.

- The GOAT 🐐 pic.twitter.com/PstgkezII3

— Johns. (@CricCrazyJohns)

 

click me!