சொந்த மண்ணில் படுகேவலமா தோற்கப்போகும் தென்னாப்பிரிக்கா.. இங்கிலாந்து அபாரம்.. 3வது டெஸ்ட்டில் நடந்த ஆச்சரியம்

By karthikeyan VFirst Published Jan 20, 2020, 1:00 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி சொந்த மண்ணில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடையவுள்ளது. படுதோல்வியை தவிர்க்க வேறு வழியே இல்லை. 

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து நீண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. 

தொடர் 1-1 என சமனடைந்திருந்த நிலையில், மூன்றாவது போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஓலி போப் ஆகியோரின் சதத்தால் 499 ரன்களை குவித்தது. 9 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்களை குவித்த நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி.

Also Read - அண்டர் 19 உலக கோப்பை.. இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் மட்டுமே அரைசதம் அடித்தார். அவரைத்தவிர வேறு யாருமே அரைசதம் அடிக்கவில்லை. அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி வெறும் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

290 ரன்கள் பின் தங்கிய நிலையில், ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் படுமோசமாக ஆடிவருகிறது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு வெறும் 102 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. 

Also Read - ஒருநாள் கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன் இவருதான்.. இவங்க 2 பேரும் சேர்ந்தா நாங்க எப்படி ஜெயிக்க முடியும்.. ஃபின்ச் புகழாரம்

பீட்டர் மாலன், டீன் எல்கர், ஹம்சா, டுப்ளெசிஸ், வாண்டெர் டசன், குயிண்டன் டி காக் என யாருமே சோபிக்கவில்லை. இவர்கள் 6 பேருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் வியப்பு என்னவென்றால், இரண்டாவது இன்னிங்ஸில் இதுவரை தென்னாப்பிரிக்க அணி இழந்துள்ள 6 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகள் ஜோ ரூட் வீழ்த்தியவை. பார்ட் டைம் பவுலர் என்றுகூட சொல்லமுடியாத ஜோ ரூட்டிடம் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது தென்னாப்பிரிக்க அணி. அதுவும், ரூட் வீழ்த்தியது சும்மா சொத்தை வீரர்கள் எல்லாம் இல்லை. டுப்ளெசிஸ், வாண்டெர் டசன், டி காக் மற்றும் பீட்டர் மாலன் ஆகிய நான்கு சிறந்த பேட்ஸ்மேன்களை வீழ்த்தியுள்ளார் ரூட். 

ஃபிளாண்டரும் கேஷவ் மஹாராஜும் களத்தில் இருந்த நிலையில், நான்காம் நாள் ஆட்டம் முடிந்தது. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு வெறும் 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. அதை முதல் செசனிலேயே இங்கிலாந்து அணி எடுத்துவிடும் என்பதால் இன்னிங்ஸ் வெற்றி உறுதியாகிவிட்டது. தென்னாப்பிரிக்க அணி சொந்த மண்ணில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வியடைய உள்ளது. 

click me!