ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 36ஆவது லீக் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்கிறது. இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், ஆஸ்திரேலியா அணியில் கிளென் மேக்ஸ்வெல்லிற்குப் பதிலாக கேமரூன் க்ரீன் அணியில் இடம் பெற்றுள்ளார்.
CWC 2023: டெல்லியில் வீரர்களுக்கு இருமல் பாதிப்பு – பயிற்சியை ரத்து செய்த வங்கதேச அணி!
கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 9 முறை மோதியுள்ளன. இதில், ஆஸ்திரேலியா 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று இரு அணிகளும் 155 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 87 ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 63 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன.
மூன்று போட்டிகளுக்கு எந்த முடிவும் இல்லை. மேலும், 2 போட்டிகள் டையில் முடிந்துள்ளது. இந்த நிலையில் தான் 10ஆவது முறையாக இரு அணிகளும் உலகக் கோப்பையில் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இதில், ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்கிறது. இந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளில் ஆஸ்திரேலியா 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது.
இங்கிலாந்து விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்தால் 2ஆவது அணியாக உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.