நியூசிலாந்து அணிக்கு எதிரான 35ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 35ஆவது லீக் தற்போது பெங்களூருவில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியில் உசாமா மிர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஹசன் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதே போன்று நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த கேன் வில்லியம்சன், வில் யங்கிற்குப் பதிலாக அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும், மேட் ஹென்றிக்குப் பதிலாக இஷ் சோதி அணியில் இடம் பெற்றுள்ளார். ஜிம்மி நீசம் நீக்கப்பட்டு மார்க் சேப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து:
டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மார்க் சேப்மேன், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, டிரெண்ட் போல்ட்.
பாகிஸ்தான்:
அப்துல்லா ஷபீக், ஃபகர் ஜமான், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), இப்திகார் அகமது, சவுத் சகீல், அகா சல்மான், ஷகீன் அஃப்ரிடி, ஹசன் அலி, முகமது வாசீம் ஜூனியர், ஹரீஷ் ராஃப்
இதுவரையில் இரு அணிகளும் 115 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. அதில், 51 போட்டிகளில் நியூசிலாந்து அணியும், 60 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 3 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.
NED vs AFG: ஒரே போட்டியில் 4 ரன் அவுட் – கடைசி வரை பொறுமையாக விளையாடிய நெதர்லாந்து 179க்கு அவுட்!