நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பையின் 40ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 40ஆவது லீக் போட்டி புனே மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இங்கிலாந்து அணியில் மார்க் வுட் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக ஹாரி ப்ரூக் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று நெதர்லாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சாகிப் சுல்பிகுர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக தேஜா நிடமானுரு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து:
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்சன், அடில் ரஷீத்
நெதர்லாந்து:
வெஸ்லி பாரேஸி, மேக்ஸ் ஓடவுட், கொலின் அக்கர்மேன், சைப்ரண்ட் எங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், ரோலாஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகரென்.
கிளென் மேக்ஸ்வெல்லின் 201 ரன்கள் சாதனைக்கு தோனி தான் காரணமா? திகைக்க வைக்கும் பின்னணி காரணம்!
நெதர்லாந்து அணி 7 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. இன்று நடக்கும் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. வரும் 11 ஆம் தேதி இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டிகளில் அதிக நெட் ரன் அடிப்படையில் வெற்றி பெற்றால் மட்டுமே நெதர்லாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறும். மேலும், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கடைசி போட்டிகளில் தோல்வி அடைந்து நெதர்லாந்து நெட் ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு அமையும்.