முடிஞ்சா அடின்னு சவால் விட்டு, முதல் நாளிலேயே 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த இங்கிலாந்து!

By Rsiva kumar  |  First Published Jun 17, 2023, 1:51 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.


ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது. ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடத்தப்படும் ஆஷஸ் தொடரில் 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது. 6 முறை ஆஷஸ் தொடர் டிராவில் முடிந்துள்ளது.

ஐபிஎல் ஃபைனல் மாதிரியே நடந்த டிஎன்பிஎல் நெல்லை மேட்ச்: ஆரம்பிச்சு வச்ச அஜிதேஷ், முடிச்சு கொடுத்த பொய்யாமொழி!

Tap to resize

Latest Videos

கடந்த 2021- 22 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் கோப்பையை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. ஆனால், இங்கிலாந்தில் 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை கைப்பற்றியது கிடையாது. தற்போது இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியா:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லயான், ஜோஸ் ஹசல்வுட், ஸ்காட் போலண்ட்.

இங்கிலாந்து:

பென் டக்கெட், ஜாக் கிராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், ஆலி ராபின்ஸன், ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஒரு போதும் ஒரு பந்து வீச்சாளராக மாறவே கூடாது – ரவிச்சந்திரன் அஸ்வின் ஃபீல் அன்ஹேப்பி!

அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 61 ரன்கள் எடுத்தார். டக்கெட் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ஆலி போப் 31 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் ஜோ ரூட் தனது 30 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

ஜானி பேர்ஸ்டோவ் 78 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மொயீன் அலி 18, ஸ்டூவர் பிராட் 16 ரன்களில் வெளியேறினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

112 அடிச்சு கொடுத்த அஜிதேஷ் குருசுவாமி: வின்னிங் ஷாட் கொடுத்த பொய்யாமொழி: த்ரில் வெற்றி பெற்ற நெல்லை!

ஆனால், முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடைசி 15 நிமிடங்கள் இருந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் அறிவித்த நிலையில் ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடியது. இதில், டேவிட் வார்னர் மற்றும் உஸ்மா கவாஜா விக்கெட்டை இழக்காமல் முதல் நாள் முடிவில் 14 ரன்கள் சேர்த்தனர்.

பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அதிரடி ஆட்டத்தை விளையாடி வருகிறது. முதல் நாளில் எவ்வளவு ரன்கள் அடிக்க முடியுமோ அவ்வளவு ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய முயற்சிப்போம் என்று கூறியிருந்தார். தற்போது அதையே செய்து எதிரணிக்கு கடும் சவாலாக இருந்து வருகிறார். ஆனால், கிரிக்கெட் விமர்சகர்கள் இன்னும் கூடுதலாக ரன்கள் சேர்த்து 2ஆவது நாளில் டிக்ளேர் செய்திருக்கலாம் என்று விமர்சித்து வருகின்றனர்.

ஒரு பந்தில் 18 ரன், ஒரே பந்துக்கு 2 டிஆர்.எஸ் என்று டிஎன்பிஎல் தொடரில் நடந்த சுவாரஸ்யங்கள்!

click me!