ENG vs IND:டெஸ்ட் போட்டிக்கான இங்கி.,அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு! விக்கெட்கீப்பர் மாற்றம்; ஆண்டர்சன் கம்பேக்

By karthikeyan VFirst Published Jun 30, 2022, 9:22 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:

இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகள் மட்டுமே நடந்தன. அதில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகித்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அந்த டெஸ்ட் போட்டி நாளை(ஜூலை1) எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது.

புதிய தலைமையின் கீழ் இந்தியா - இங்கிலாந்து பலப்பரீட்சை:

கடந்த ஆண்டு இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி; இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். இந்த முறை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா; இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். இரு அணிகளின் கேப்டன்கள் மட்டுமல்லாது, மொத்த அணி சூழலே மாறியிருக்கிறது என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். கடந்த ஆண்டு ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளர். இந்த முறை ராகுல் டிராவிட். அதேபோல இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இப்போது பிரண்டன் மெக்கல்லம் செயல்படுகிறார். 

இதையும் படிங்க - ENG vs IND: டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஆடல.. பும்ரா கேப்டனாக அறிவிப்பு..! மிகப்பெரிய கௌரவம் என பும்ரா பெருமிதம்

கடும் போட்டி:

கடந்த ஆண்டு இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது, சொந்த மண்ணில் 2 தோல்விகளை சந்தித்தது இங்கிலாந்து அணி. ஆனால் பிரண்டன் மெக்கல்லமின் பயிற்சியில் பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியில் நியூசிலாந்தை டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்து 3-0 என இங்கிலாந்து வென்றுள்ளது. அதே உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் இங்கிலாந்து அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணியும் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வெல்லும் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

இங்கிலாந்து அணி அறிவிப்பு:

இரு அணிகளுமே வெற்றி வேட்கையுடன் களமிறங்கும் நிலையில், இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையில் நியூசிலாந்தை எதிர்கொண்டு ஆடி தொடரை வென்ற இங்கிலாந்து அணி காம்பினேஷனில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க - ENG vs IND: வெறும் சதத்தை மட்டும் பார்க்காதீங்க..! விராட் கோலிக்கு முட்டு கொடுக்கும் ராகுல் டிராவிட்

நியூசிலாந்து தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட பென் ஃபோக்ஸுக்கு பதிலாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இங்கிலாந்து அணியின் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த சீனியர் ஃபாஸ்ட் பவுலரான ஜேம்ஸ் ஆண்டர்சன் கம்பேக் கொடுத்துள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணி:

அலெக்ஸ் லீஸ், ஜாக் க்ராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), மேத்யூ பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
 

click me!