இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் லைவ் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது.
விவாகரத்து பெற்ற ஷிகர் தவான்! மனைவி ஆயிஷா செய்த கொடுமைகளுக்கு முடிவுகட்டிய டெல்லி நீதிமன்றம்
டி20 மற்றும் உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியை ஜோஸ் பட்லர் வழிநடத்துவார். அவர்கள் 15 பேர் கொண்ட தங்கள் ஆரம்பக் குழுவை சமீபத்தில் பெயரிட்டுள்ளனர். பென் ஸ்டோக்ஸ் ஓய்வில் இருந்து தனது அணிக்காக ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட உள்ளார். அவர் டி20 தொடரில் விளையாடவில்லை, ஆனால் உலகக் கோப்பைக்கு முன்னதாக ஒருநாள் தொடரில் விளையாடுவார். ஜோ ரூட்டும் அணியில் ஒரு அங்கமாக இருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். இவரைப் போன்று டிம் சவுதியும் விலகியிருக்கிறார். இவர்கள் தவிர, டிரெண்ட் போல்ட், லாக்கி பெர்குசன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர் உலகக் கோப்பைக்கு முன்னோடியாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடின. ஒருநாள் தொடரை இங்கிலாந்து 3-1 என கைப்பற்றிய நிலையில் டி20 தொடர் டிராவில் முடிந்தது. சமீபத்தில் விளையாடிய இரு அணிகளும் ஒருவருக்கொருவர் பலம் மற்றும் பலவீனங்களை நன்கு உணர்ந்துள்ளன.
World Cup 2023: 10 அணிகள் உலகக் கோப்பைக்கு தேர்வு பெற்றது எப்படி?
இரு அணிகளும் இதுவரையில் 95 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இங்கிலாந்து 45 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. நியூசிலாந்து 44 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் 4 போட்டிகளுக்கு முடிவு இல்லை. 2 போட்டிகள் டையில் முடிந்தன. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடியது.
உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டி டிராவில் முடியவே சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில், இங்கிலாந்து 15 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து ஒரு விக்கெட் இழந்து 15 ரன்கள் எடுக்கவே, இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Asian Games 2023, India vs Nepal: சுரேஷ் ரெய்னா, சுப்மன் கில் சாதனையை முறியடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்து:
ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரண், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷீத், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்ளி, டேவிட் வில்லி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், ஹாரி ப்ரூக்.
நியூசிலாந்து:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரெண்ட் போல்ட், டெவான் கான்வே, டிம் சவுதி, மார்க் சாப்மேன், லாக்கி ஃபெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம் (துணை கேப்டன்), மிட்செல் சாண்ட்னர், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், இஷ் சோதி, டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, வில் யங்.
நரேந்திர மோடி மைதானம் ரெக்கார்ட்ஸ்:
இதுவரையில் 28 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளது. முதலில் பேட்டிங் பேடிய அணி 16 முறையும், 2ஆவது பேட்டிங் ஆடிய அணி 12 முறையும் வெற்றி பெற்றன.
அதிகபட்ச ஸ்கோர் – 365/2, 50 ஓவர்கள், தென் ஆப்பிரிக்கா – இந்தியா
குறைந்தபட்ச ஸ்கோர் 85/10, 30.1 ஓவர்கள், ஜிம்பாப்வே – வெஸ்ட் இண்டீஸ்
சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் – 325/5 47.4 ஓவர்கள், இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்
குறைந்த ஸ்கோர் – 196/10, 48.3 ஓவர்கள் வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா
எதிர்பார்ப்பு:
இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவிக்கும் வீரர் – பென் ஸ்டோக்ஸ் அல்லது ஜோஸ் பட்லர்
இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்று வீரர் – அடில் ரஷீத் அல்லது சாம் கரண்
நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவிக்கும் வீரர் – டெவோன் கான்வே அல்லது டாம் லாதம்
நியூசிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்று வீரர் – டிரெண்ட் போல்ட் அல்லது டிம் சவுதி