ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டியின் 5ஆவது நாள் மழையால் ரத்தான நிலையில், இந்தப் போட்டி டிராவில் முடிந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில், இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இஷான் கிஷான் அரைசதம் அடிக்கும் வரை காத்திருந்து டிக்ளேர் செய்த ரோகித் சர்மா!
மிட்செல் மார்ஷ் 51 ரன்களும், மார்னஸ் லபுஷேன் 51 ரன்களும், டிராவிஸ் ஹெட் 48 ரன்களும் எடுத்தனர். பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போன்று விளையாடி ரன்கள் சேர்த்தார். அவர், 182 பந்துகளில் 21 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 189 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ACC Mens Emerging Asia Cup 2023 Final: தேசிய கொடியில் மோடின்னு எழுதி காண்பித்த ரசிகர்களால் சர்ச்சை!
ஜோ ரூட் 84 ரன்களும், மொயீன் அலி 54 ரன்களும், ஹாரி ப்ரூக் 61 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 51 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 99 ரன்களும் எடுக்கவே இங்கிலாந்து 592 ரன்கள் குவித்தது. பின்னர் 275 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், தொடக்க வீரர்களான உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த, மார்னஷ் லபுஷேன் 173 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 111 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ஸ்மித் 17, ஹெட் 1 ரன்னில் ஆட்டமிழக்க, மிட்செல் மார்ஷ் 31 ரன்னுடனும், கேமரூன் க்ரீன் 3 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். நான்கு நாட்கள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்துள்ளது.
5ஆவது நாளான நேற்று எஞ்சிய 61 ரன்கள் எடுத்து மீண்டும் ரன்கள் சேர்த்து நாள் முழுவதும் விளையாடினால், போட்டி டிரா ஆகும். ஆனால், இந்த 61 ரன்களை எடுப்பதற்குள்ளாக ஆஸ்திரேலியா எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் இழந்துவிட்டால் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. ஆனால், 5ஆவது நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த 4ஆவது டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது.
இதன் மூலமாக ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி வரும் 27 ஆம் தேதி நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். இங்கிலாந்து வெற்றி பெற்றால் ஆஷஸ் தொடர் சமன் ஆகும்.