இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸிற்கு இடுப்பில் லேசான வலி ஏற்பட்ட நிலையில், நியூசிலாந்திற்கு எதிரான முதல் லீக் போட்டியில் இடம் பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இதில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவர் மூலமாக இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
World Cup 2023: அங்கு என்ன தெரிகிறது? வடிவேலு பட மீம்ஸ் உருவாக காரணமான ஜோஸ் பட்லர்!
அதற்கு பழி தீர்க்கும் வகையில் நியூசிலாந்து அணி இன்றைய போட்டியிலும் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வார்ம் அப் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் குவித்து 2 வார்ம் அப் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றது. ஆனால், இங்கிலாந்து ஒரு வார்ம் அப் போட்டியில் மட்டுமே விளையாடி அதில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இன்று நடக்கும் உலகக் கோப்பை முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இடுப்பில் ஏற்பட்ட வலி காரணமாக விலகியதாக கூறப்படுகிறது. எனினும், இன்று பிற்பகலில் அவரது உடல்நிலையைப் பொறுத்து அவர் அணியில் இடம் பெறுவது குறித்து உறுதி செய்யப்படும். ஒருவேளை பென் ஸ்டோக்ஸ் இடம் பெறவில்லை என்றால் அவருக்குப் பதிலாக ஹாரி ப்ரூக் அணியில் இடம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியிருந்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியும் விலகியிருக்கிறார். டாம் லாதம் இன்றைய போட்டியில் கேப்டனாக செயல்பட உள்ளார்.
ENG vs NZ: 2019 உலகக் கோப்பைக்கு பழி தீர்க்குமா நியூசிலாந்து? அகமதாபாத்தில் ENG vs NZ பலப்பரீட்சை!