SA20: அதிரடி காட்டிய கிளாசன்:எளிதில் வெற்றி பெற்ற டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ்!

By Rsiva kumarFirst Published Jan 16, 2023, 4:12 PM IST
Highlights

பார்ல் ராயல்ஸ் அணிக்கு எதிரான எஸ் ஏ20 போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 8ஆவது போட்டி டர்பனில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டர்பன் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கைல் மேயர்ஸ், குயிண்டன் டி காக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), வியான் முல்டர், ஹென்ரிச் கிளாசன், ஜேசன் ஹோல்டர், ட்வைன் பிரிட்டோரியஸ், கீமோ பால், கேஷவ் மஹராஜ், சைமன் ஹார்மெர், ரீஸ் டாப்ளி, பிரெனெலான் சுப்ராயென்.

பார்ல் ராயல்ஸ் அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), விஹான் லுப்பே, டேன் விலாஸ், டேவிட் மில்லர் (கேப்டன்), இயன் மோர்கன், ஃபெரிஸ்கோ ஆடம்ஸ், இவான் ஜோன்ஸ், இம்ரான் மனாக், ஃபார்ச்சூன், லுங்கி இங்கிடி.

புத்தாண்டை புதுவிதமாக வரவேற்ற கிங்: எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி!

முதலில் பேட்டிங் ஆடிய டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கைல் மேயர்ஸ் மற்றும் முல்டர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவரில் 62 ரன்கள் அடித்தனர். மேயர்ஸ் 23 பந்தில் 39 ரன்களும், முல்டர் 33 பந்தில் 42 ரன்களும் அடித்தனர். கேப்டன் டி காக் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 31 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் அடித்தார். 

அதன்பின்னர் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன், 19 பந்தில் 6 சிக்ஸர்களை விளாசி அரைசதம் அடித்து அபாரமாக இன்னிங்ஸை முடித்து கொடுக்க, 20 ஓவரில் 216 ரன்களை குவித்த டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 217 ரன்கள் என்ற கடின இலக்கை பார்ல் ராயல்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.

ஒரு நாள் போட்டியில் சாதித்து காட்டிய இந்தியா! 317 ரன்கள் வித்தியாசம் - இதுவே முதல் முறை!

இதைத் தொடர்ந்து கடின இலக்கை துரத்திய பார்ல் ராயல்ஸ் அணிக்கு ஜேசன் ராய் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். அவர் 33 ரன்களில் ஆட்டமிழக்க, மோர்கன் 64 ரன்னிலும், விலாஸ் 44 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பிறகு வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இன்று நடக்கும் 9ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்வர்ன் கேப் அணியும், எம் ஐ கேப்டவுன் அணியும் மோதுகின்றன.

ஜனவரி 15 என்றாலே வெறியாட்டம் ஆடும் கோலி..! பிரமிக்க வைக்கும் கோலியின் ஜனவரி 15 வரலாறு

click me!