டி20 உலகக் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் நடத்தும் 2024 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரையில் நடக்க இருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், நேபாள், நியூசிலாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், நமீபியா, ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா உகாண்டா, கனடா என்று 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்ட ரசிகர்கள் – டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர்!
இதில், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்காவில் நடத்த முடிவு செய்தது. ஆனால், அமெரிக்கா நாட்டு கிரிக்கெட் அணி கத்துக்குட்டி அணியாக உள்ள நிலையில், அதை விட சின்ன அணியை கூட வீழ்த்தும் அளவிற்கு கூட இன்னும் வளரவில்லை.
ஆதலால், அமெரிக்கா அணியை வைத்து அமெரிக்காவில் உலகக் கோப்பையை பிரபலப்படுத்த முடியாது. எனவே, வெஸ்ட் இண்டீஸீல் பாதி தொடரையும், அமெரிக்காவில் பாதி தொடரையும் நடத்த ஐசிசி தீர்மானித்தது. இதில் அமெரிக்காவில் அதிகளவில் இந்தியர்கள் இருக்கும் நிலையில், இந்திய அணியை வைத்து அமெரிக்காவில் உலகக் கோப்பை தொடரை நடத்த முடிவு செய்து, இந்தியா விளையாடும் லீக் சுற்று போட்டிகளுக்கான அட்டவணையை தயார் செய்தது.
T20 World Cup 2024 Schedule: இந்தியா, பாகிஸ்தான் ஒரே குரூப், ஏன் தெரியுமா – ஐசிசியின் பக்கா பிளான்!
அதுவும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் 2 அணிகளுமே ஒரே குரூப்பில் இருக்கும் வகையிலும், அந்த குரூப்பில் கனடா, அயர்லாந்து மற்றும் அமெரிக்கா என்று கத்துக்குட்டி அணிகளையும் சேர்த்துள்ளத். இதன் மூலமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு – குரூப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!
இந்த தொடரில் இடம் பெற்ற 20 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்தப் குரூப் சுற்று போட்டிகள் ஜூன் 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் நடைபெறும். இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்த சூப்பர் 8 சுற்றானது 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். இந்த சூப்பர் 8 சுற்று போட்டிகள் ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 24 ஆம் தேதி வரையில் நடைபெறும். இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
ஜூன் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் முதல் மற்றும் 2ஆவது அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்படும். கடைசியாக ஜூன் 29ஆம் தேதி இறுதிப் போட்டி நடத்தப்படுகிறது. ஜூன் 1 ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியிலேயே குரூப் ஏ பிரிவில் உள்ள அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி டல்லாஸில் நடக்கிறது. இந்திய அணி விளையாடும் 4 போட்டிகளும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது.
இந்தியா விளையாடும் போட்டிகள்:
ஜூன் 5 – இந்தியா – அயர்லாந்து – நியூயார்க்
ஜூன் 9 – இந்தியா – பாகிஸ்தான் – நியூயார்க்
ஜூன் 12 – இந்தியா – அமெரிக்கா – நியூயார்க்
ஜூன் 15 – இந்தியா – கனடா – லாடர்ஹில் (ஃபுளோரிடா)
இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே இருக்கிறது.