டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனங்கள் தங்களது பிஸினஸை விற்க முடிவு செய்து சன் டிவி மற்றும் ஜியோ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மிக சிறந்த ஓடிடி தளமான டிஸ்னி+ஹாட்ஸ்டார் நிறுவனமான 2023 ஆம் ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை இழந்தது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் உரிமையை ரிலைன்ஸ் கூட்டணியில் உருவான வையாகாம்18 நிறுவனம் கைப்பற்றியது. இதன் காரணமாக டிஸ்னி நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை இழந்த நிலையில், போதுமான வருவாயையும் இழந்தது.
மேலும், ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம் என்று ஜியோ நிறுவனம் அறிவித்தது. அதுமட்டுமின்றி தொலைக்காட்சிக்கான ஐபிஎல் உரிமைமையை ஸ்டார் நிறுவனம் நிலையில் ஓடிடியை கைப்பற்ற முடியவில்லை. இதன் காரணமாக ஹாட்ஸ்டார் தங்களது வாடிக்கையாளர்களை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி ஹெச்பிஓ நிறுவனம் ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கி ஜியோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.
New Zealand vs Netherlands: 2 மாற்றங்களுடன் களமிறங்கும் நெதர்லாந்து – டாஸ் வென்று பவுலிங் தேர்வு!
தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மற்றும் வருவாயை இழந்த நிலையில் டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் தொலைக்காட்சியை விற்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக அதானி மற்றும் சன் டிவி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்போது தான் பேச்சுவார்த்தையில் டிஸ்னி+ஹாட்ஸ்டார் நிறுவனம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
IND vs AUS: சென்னையில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா உலகக் கோப்பைக்காக வந்த நடிகர் வெங்கடேஷ், சதீஷ்!