AFG vs AUS:என்னா அடி: நான் பார்த்த மிகப்பெரிய இன்னிங்ஸ் – மேக்ஸ்வெல்லிற்கு பாகுபலி பட இயக்குநர் வாழ்த்து!

Published : Nov 08, 2023, 07:04 AM IST
AFG vs AUS:என்னா அடி: நான் பார்த்த மிகப்பெரிய இன்னிங்ஸ் – மேக்ஸ்வெல்லிற்கு பாகுபலி பட இயக்குநர் வாழ்த்து!

சுருக்கம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 39ஆவது லீக் போட்டியில் இரட்டை சதம் விளாசி அணியை வெற்றி பெறச் செய்த கிளென் மேக்ஸ்வெல்லிற்கு பாகுபலி பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலானப் உலகக் கோப்பையின் 39ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஜத்ரன் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ரன் சேஸ் 287 ரன்கள் மட்டுமே. அதுவும் கடந்த 1996 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்திற்கு எதிராக 287 ரன்களை சேஸ் செய்துள்ளது. ஆதலால், இந்தப் போட்டியில் 291 ரன்களை சேஸ் செய்யுமா என்ற கேள்வி இருந்தது. அதற்கேற்பவும் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரும் இருந்தது.

உலகக் கோப்பையில் கபில் தேவ் 175 ரன்கள் சாதனையை முறியடித்து கிளென் மேக்ஸ்வெல் சாதனை!

சீரான இடைவெளியில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அதில், டிராவிஸ் ஹெட் 0, மிட்செல் மார்ஷ் 24, டேவிட் வார்னர் 18, ஜோஷ் இங்கிலிஸ் 0, மார்னஷ் லபுஷேன் 14 ரன் அவுட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 6, மிட்செல் ஸ்டார் 3 என்று 18.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 97 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அதன் பிறகு கிளென் மேக்ஸ்வெல் மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர். கம்மின்ஸ் தனது விக்கெட்டை இழக்காமல் பார்த்துக் கொள்ள மேக்ஸ்வெல் வெற்றி தேடிக் கொடுத்தார். உலகக் கோப்பையில் ஒரு நாள் போட்டிகளில் கிளென் மேக்ஸ்வெல் 200 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

உலகக் கோப்பையில் இரட்டை சதம் அடித்து கிளென் மேக்ஸ்வெல் சாதனை – 21 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் உடன் 201 நாட் அவுட்!

அவர் 128 பந்துகளில் 21 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் உள்பட 201 ரன்கள் எடுத்துள்ளார். கம்மின்ஸ் 68 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 12 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 46.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இக்கட்டான சூழலில் அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்ற மேக்ஸ்வெல்லிற்கு கிரிக்கெட், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மேக்ஸ்வெல்லிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மேட் மேக்ஸ்….. நான் பார்த்த மிகப்பெரிய இன்னிங்ஸ்.. வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

ருத்ரதாண்டவம் ஆடிய மேக்ஸ்வெல் 201 நாட் அவுட் – வரலாற்று சாதனையோடு அரையிறுதிக்கு முன்னேற்றம்!

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

சஞ்சு சாம்சன் ஆவேசம்.. வலியால் துடித்து அலறிய அம்பயர்.. பதறிய‌ கம்பீர்.. என்ன நடந்தது?
இங்கிலாந்தை கதறவிட்ட ஹெட் 'மாஸ்டர்'.. அட்டகாசமான சதம்.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!