IND vs NZ:டெவான் கான்வே அரைசதம்; டேரைல் மிட்செல் காட்டடி ஃபினிஷிங்! முதல் டி20யில் இந்திய அணிக்கு சவாலானஇலக்கு

By karthikeyan VFirst Published Jan 27, 2023, 8:56 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, டெவான் கான்வே மற்றும் டேரைல் மிட்செலின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 176 ரன்கள் அடித்து, 177 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

IND vs AUS: விராட் கோலி களத்திற்கு வந்ததும் இதை செய்யுங்க..! பாட் கம்மின்ஸுக்கு கில்லெஸ்பி முரட்டு ஆலோசனை

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், டேரைல் மிட்செல், க்ளென் ஃபிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், ஜேக்கப் டஃபி, இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன், பிளைர் டிக்னெர்.

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் ஃபின் ஆலன் இணைந்து அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவரில் 43 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 23 பந்தில் 35 ரன்கள் அடித்து ஃபின் ஆலன் ஆட்டமிழந்தார். ஃபின் ஆலனை  அவுட்டாக்கி முதல் பிரேக்கை கொடுத்தார் வாஷிங்டன் சுந்தர். ஃபின் ஆலனை வீழ்த்திய அதே 5வது ஓவரில் மார்க் சாப்மேனையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார் சுந்தர்.

Womens U19 T20 World Cup: அரையிறுதியில் நியூசிலாந்தை அசால்ட்டா அடித்து வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது இந்தியா

ஆனால் நிலைத்து நின்று அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் டெவான் கான்வே அரைசதம் அடித்தார். 35 பந்தில் 52 ரன்கள் அடித்து கான்வே அர்ஷ்தீப் சிங்கின் பவுலிங்கில் 18வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மைக்கேல் பிரேஸ்வெல்லும் ரன் அவுட்டானார். அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசிய டேரைல் மிட்செல் 26 பந்தில் அரைசதம் அடித்தார். 30 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 59 ரன்களை குவித்து நியூசிலாந்து அணிக்கு இன்னிங்ஸை சிறப்பாக முடித்து கொடுக்க, 20 ஓவரில் 176 ரன்களை  குவித்த நியூசிலாந்து அணி, 177 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!