SA vs ENG: வாண்டர் டசன் அபார சதம்.. டேவிட் மில்லர் அரைசதம்.! முதல் ODI-யில் இங்கிலாந்துக்கு சவாலான இலக்கு

Published : Jan 27, 2023, 08:21 PM ISTUpdated : Jan 27, 2023, 08:23 PM IST
SA vs ENG: வாண்டர் டசன் அபார சதம்.. டேவிட் மில்லர் அரைசதம்.! முதல் ODI-யில் இங்கிலாந்துக்கு சவாலான இலக்கு

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, வாண்டர்டசனின் அபார சதம் மற்றும் டேவிட் மில்லரின் அரைசதத்தால் 50 ஓவரில் 298 ரன்கள் அடித்து, 299 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.  

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ராசி வாண்டர்டசன், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், வைன் பார்னெல், சிசாண்டா மகளா, ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, டப்ரைஸ் ஷம்ஸி.

IND vs AUS: விராட் கோலி களத்திற்கு வந்ததும் இதை செய்யுங்க..! பாட் கம்மின்ஸுக்கு கில்லெஸ்பி முரட்டு ஆலோசனை

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மொயின் அலி, சாம் கரன், டேவிட் வில்லி, அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆலி ஸ்டோன்.

முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 61 ரன்களை சேர்த்தனர். பவுமா 36 ரன்களுக்கும், டி காக் 37 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 3ம் வரிசையில் இறங்கிய வாண்டர்டசன் நிலைத்து நின்று அடித்து ஆட, மறுமுனையில் மார்க்ரம் (13), ஹென்ரிச் கிளாசன்(30) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

Womens U19 T20 World Cup: அரையிறுதியில் நியூசிலாந்தை அசால்ட்டா அடித்து வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது இந்தியா

ஒருமுனையில் மற்ற வீரர்கள் சிறிய ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடிய வாண்டர்டசன் சதமடித்தார். வாண்டர்டசனும் டேவிட் மில்லரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 110 ரன்களை குவித்தனர். வாண்டர்டசன் 117 பந்தில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய டேவிட் மில்லர் அரைசதம் அடித்தார். 53 ரன்கள் அடித்த டேவிட் மில்லர் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 50 ஓவரில் 298 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க அணி, 299 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!