IND vs NZ: முதல் டி20 டாஸ் ரிப்போர்ட்.. இளம் வீரர்கள் நிறைந்த இந்திய அணி.. பிரித்வி ஷாவுக்கு இடம் இல்லை

By karthikeyan VFirst Published Jan 27, 2023, 6:55 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை  தேர்வு செய்தது.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வென்றது. அதைத்தொடர்ந்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று ராஞ்சியில் நடக்கிறது.

கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்கள் இந்த தொடரில் ஆடாததால், ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் இளம் வீரர்கள் நிறைந்த இந்திய அணி இந்த தொடரில் ஆடுகிறது. ராஞ்சியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

IND vs AUS: விராட் கோலி களத்திற்கு வந்ததும் இதை செய்யுங்க..! பாட் கம்மின்ஸுக்கு கில்லெஸ்பி முரட்டு ஆலோசனை

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷனும் ஷுப்மன் கில்லும் ஆடுகின்றனர். கோலி ஆடாததால் ராகுல் திரிபாதி 3ம் வரிசையில் இறங்குகிறார். வழக்கம்போல சூர்யகுமார் யாதவ் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் முறையே 4 மற்றும் 5ம் வரிசைகளில் ஆடுகின்றனர். தீபக் ஹூடா ஃபினிஷராக ஆடுகிறார். ஸ்பின்னர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் ஆடுகின்றனர். இளம் வீரர்கள் நிறைந்த இந்திய அணியில் பிரித்வி ஷாவுக்கு இடம் கிடைக்கவில்லை. ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையுமே உட்காரவைக்க முடியாது என்பதால் பிரித்வி ஷாவுக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணி:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

Womens U19 T20 World Cup: அரையிறுதியில் நியூசிலாந்தை அசால்ட்டா அடித்து வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது இந்தியா

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், டேரைல் மிட்செல், க்ளென் ஃபிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், ஜேக்கப் டஃபி, இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன், பிளைர் டிக்னெர்.
 

click me!