மகளிர் அண்டர்19 டி20 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
மகளிர் அண்டர்19 டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.
இன்று பிற்பகல் இந்திய நேரப்படி ஒன்றரை மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின. மாலை 5.15 மணிக்கு தொடங்கும் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.
BBL: டி20-யிலும் நான் கில்லிடா.. சிட்னி தண்டர் பவுலிங்கை அடி பிரித்து மேய்ந்த உஸ்மான் கவாஜா
இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியை தொடக்கம் முதலே ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தினர் இந்திய பவுலர்கள். அந்த அணியில் அதிகபட்சமாகவே பிலிம்மர் 35 ரன்கள் தான் அடித்தார். மற்ற அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 20 ஓவரில் வெறும் 107 ரன்கள் மட்டுமே அடித்தது.
இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய ரிஸ்ட் ஸ்பின்னர் பார்ஷவி சோப்ரா 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
டெஸ்ட் அணியில் சர்ஃபராஸ் கானை எடுக்காதது ஏன்..? இந்திய அணி தேர்வாளர் விளக்கம்
108 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வெர்மா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷ்வேதா செராவத் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 45 பந்தில் 10 பவுண்டரிகளுடன் 61 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். ஷ்வேதாவின் அதிரடி அரைசதத்தால் 15வது ஓவரிலேயே இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அண்டர்19 மகளிர் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.