மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனில் இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனின் இறுதிப் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆனால், கடந்த ஆண்டு நடந்த முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக மெக் லேனிங் 35 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் கடைசி வரை போராடி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியனாகியுள்ளது.
இதே நிலை தான் தற்போது 2ஆவது சீசனிலும் டெல்லி அணிக்கு நடந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்து 113 ரன்கள் எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து 114 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் விளையாடி வருகிறது. தற்போது வரையில் ஆர்சிபி 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 60 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இன்னும், 8 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 53 ரன்கள் தேவை.