WPL 2024 Final, DCW vs RCBW: ஓரே ஓவரில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி டெல்லியின் பிளானுக்கு ஆப்பு வச்ச மோலினெக்ஸ்!

By Rsiva kumar  |  First Published Mar 17, 2024, 8:54 PM IST

டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆர்சிபி வீராங்கனை ஷோபி மோலினெக்ஸ் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.


டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் 2024 தொடரின் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஷஃபாலி வெர்மா மற்றும் மெக் லேனிங் இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர்.

இதில் ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். ஒரு கட்டத்தில் அரைசதம் அடிக்க இருந்த நிலையில், ஷோஃபி மோலினெக்ஸ் ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து வேர்ஹாமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷஃபாலி வர்மா 27 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 44 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 பந்தில் ஸ்வீப் அடிக்க முயற்சித்து கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து வந்த அலீஸ் கேப்ஸி தலைக்கு மேல் தூக்கி அடிக்க முயற்சித்து கிளீன் போல்டானார்.

Tap to resize

Latest Videos

டெல்லி கேபிடல்ஸ் 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்து ரன் ஏதும் எடுக்காமல் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இவரைத் தொடர்ந்து கேப்டன் மெக் லேனிங் 23 ரன்களில் ஷ்ரேயங்கா பாட்டீல் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு பந்து வீச வந்த ஆஷா ஷோபனா தனது ஓவரில் 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

தற்போது வரையில் டெல்லி கேபிடல்ஸ் 15 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

 

Shafali Verma ✅
Jemimah Rodrigues ✅
Alice Capsey ✅

That was one incredible 3⃣-wicket over from Sophie Molineux 👏 👏

Watch 🎥 🔽

Follow the match ▶️ https://t.co/g011cfzcFp | | | pic.twitter.com/a6gKyIFhtw

— Women's Premier League (WPL) (@wplt20)
click me!