ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனின் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இதில், டெல்லி கேபிடல்ஸ் மகளிர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணிகள் மோதுகின்றன. இதுவரையில் நடந்த லீக் போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 8 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கடந்த சீசனிலும் இதே போன்று தான் டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 8 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது. இறுதிப் போட்டியில் மும்பையிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி விளையாடிய 8 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடித்துள்ளது. எலிமினேட்டர் போட்டியில் மும்பைக்கு எதிராக கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு ஆர்சிபி முன்னேறியது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனைப் போன்று 2ஆவது அணியாக இறுதிப் போட்டிக்கு வந்த அணி தான் டிராபியை கைப்பற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
எனினும் இந்த முறை டெல்லி கேபிடல்ஸ் கடுமையாக விளையாடி டிராபியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஆர்சிபியை பொறுத்த வரையில் ஒரு மாற்றம் செய்துள்ளது. திஷா கசாட் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சப்பினேனி மேகனா சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ்:
மெக் லேனிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, அலீஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசன்னே கேப், ஜெஸ் ஜோனாசென், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஷிகா பாண்டே, மின்னு மணி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர்:
ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோஃபி டிவைன், சப்பினேனி மேகனா, எல்லீஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஷோபி மோலினெக்ஸ், ஜார்ஜியா வார்காம், ஷ்ரேயங்கா பாட்டீல், ஆஷா ஷோபனா, ஷ்ரத்தா போகர்கர், ரேணுகா தாக்கூர் சிங்.