நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இதில் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. கை விரல் காயம் காரணமாக டெவோன் கான்வே தொடரிலிருந்து விலகியுள்ளார். ஷிவம் துபேவும் காயம் காரணமாக இதுவரையில் பயிற்சியை மேற்கொள்ளவில்லை.
சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் இந்தியா வந்து தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தான், ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்று பார்க்கலாம் வாங்க….
ருதுராஜ் கெய்க்வாட்:
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெற்றுள்ளார். கடந்த சீசனில் டெவோன் கான்வேக்கு பிறகு அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட் 16 போட்டிகளில் 15 இன்னிங்ஸ் விளையாடி 590 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனிலும் அதிக ரன்கள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜிங்க்யா ரஹானே
அண்மையில் நடந்து முடிந்த ரஞ்சி டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மும்பை அணியில் இடம் பெற்று விளையாடிய ரஹானே அணிக்கு வெற்றி தேடி கொடுத்துள்ளார். தனது சிறப்பான பேட்டிங்கால் சிஎஸ்கே அணிக்கும் வெற்றி தேடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரச்சின் ரவீந்திரா
இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் சிறப்பான பங்களிப்பை அளித்தைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ளார். தனது முதல் சீசனில், அதுவும் தோனி தலைமையில் விளையாடும் ரவீந்திரா, அதிக ரன்களும், அதிக விக்கெட்டுகளும் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டேரில் மிட்செல்
உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு எதிராக அதிக சதங்கள் குவித்த மிட்செல் இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷிவம் துபே
கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று விளையாடிய ஷிவம் துபே 16 போட்டிகளில் 14 இன்னிங்ஸ் விளையாடி 3 அரைசதங்கள் உள்பட 418 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனிலும் ஷிவம் துபே சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக இதுவரையில் பயிற்சியை தொடங்காத ஷிவம் துபே அணியில் இடம் பெற்றால் மட்டுமே பிளேயிங் 11ல் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
எம்.எஸ்.தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்)
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, தனது சிறப்பான கேப்டன்ஸி திறமையால் அணிக்கு வெற்றி தேடி கொடுப்பதில் வல்லவரான தோனி இந்த சீசனில் அதிக ரன்கள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரவீந்திர ஜடேஜா
கடந்த சீசனில் 2 பந்தில் 10 ரன்கள் எடுத்துக் கொடுத்து சிஎஸ்கே அணிக்கு 5ஆவது முறையாக டிராபியை வென்று கொடுத்தவர் ரவீந்திர ஜடேஜா. இந்த முறையும், தனது பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்து விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷர்துல் தாக்கூர்
கேகேஆர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஷர்துல் தாக்கூரை சிஎஸ்கே நம்பி ஏலம் எடுத்தது. இந்த சீசனில் தோனி தலைமையில் விளையாடும் ஷர்துல் தாக்கூர் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகள் கைப்பற்றுவதோடு, அதிக ரன்களும் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபக் சாகர்
கடந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகள் கைப்பற்றிய தீபக் சாகர், இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதீஷ் பதிரனா
தோனியின் செல்லப்பிள்ளையான மதீஷ் பதிரனா கடந்த சீசனில் 19 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முஷ்தாபிஜூர் ரஹ்மான்
டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட முஷ்தாபிஜூர் ரஹ்மானை சிஎஸ்கே ரூ.2 கோடிக்கு வாங்கியது. கடந்த சீசனில் 2 போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றினார். இந்த சீசனில் அவர், கூடுதலான விக்கெட்டுகள் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.