100 டெஸ்ட் மற்றும் 500 விக்கெட்டிற்கு ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, ரவீந்திர ஜடேஜா தனக்கே உரிய பாணியில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டியின் மூலமாக ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று விளையாடினார். இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டும், 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டும் கைப்பற்றினார். இந்த போட்டியில் இந்தியா 64 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும், இங்கிலாந்திற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். இந்த நிலையில் தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அவருக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. மேலும், 500 நாணயங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தான், ஐபிஎல் 2024 தொடருக்கான சென்னை வந்த ரவீந்திர ஜடேஜா, அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: ஹாய், ஐ ஆம் ரவி இந்திரன் அண்ட் யு ஆர் ரவி சந்திரன், ரைட் ஆர்ம் ஆஃப் ஸ்பிரேக், ப்ரம் மதராஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மீசை வச்சவன் இந்திரன், மீசை வைக்காதவன் சந்திரன்…ஹாய் அஸ் அண்ணா, வாழ்த்துக்கள். 100 டெஸ்ட் போட்டி மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகள். நான் உங்களுக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய அணிக்கான உங்களது பங்களிப்பு அற்புதம். தொடர்ந்து நீங்கள் அதிக விக்கெட்டுகள் கைப்பற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Indran Calling Chandran! 📞🫂
Wishing our Tamil Singam Ash on his Spincredible 5️⃣0️⃣0️⃣! 🥳 🦁💛 pic.twitter.com/EV5k1u0y7A