ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கிங் பாண்டிங் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் பாண்டிங் ஒயின்ஸ்-ஐ தொடங்கி வைத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் செயல்பட்டு வருகிறார். இதுவரையில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து தொடரிலிருந்தும் வெளியேறியது. எனினும், இன்னும் 2 போட்டிகளில் விளையாடுகிறது.
தற்போது தர்சமாலாவில் இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் 64ஆவது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் 'Ponting Wines'-களை ரிக்கி பாண்டிங் தொடங்கி வைத்தார். டெல்லி டூயிட்டி ஃப்ரீ என்ற வரியில்லா விற்பனை நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரிக்கி பாண்டிங் தனது நிறுவன தயாரிப்பான (Ponting Wines) பாண்டிங் ஒயின்ஸ்களை தொடங்கி வைத்தார்.
பிளே ஆஃப் சென்ற குஜராத்: 7 அணிகள் 3 இடங்கள்: சிஎஸ்கே, மும்பை, ஆர்ஆர், ஆர்சிபி நிலை என்ன?
இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ஒயின் பிரியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டெல்லி டியீட்டி ஃப்ரீ பாண்டிங் ஒயின் வாங்கிய்வர்களுக்கு ரிக்கி பாண்டிங் ஆட்டோகிராஃப் போடப்பட்ட கூகரா பேட் பரிசாக வெல்லும் வாய்ப்பை அளித்துள்ளது. ரிக்கி பாண்டிங் மற்றும் பென் ரிக்ஸ் என்ற விருது பெற்ற ஆஸ்திரேலியன் ஒயின் தயாரிப்பாளரின் கூட்டமைப்பில் இந்த பாண்டிங் ஒயின்ஸ் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பழிக்கு பழி வாங்குமா இல்லை பஞ்சாப்பின் பிளே ஆஃப் சுற்றுக்காக விட்டுக் கொடுக்குமா டெல்லி?
Ponting wines have launched at Delhi Duty free. pic.twitter.com/2iSJtuPMv7
— Johns. (@CricCrazyJohns)