பிளே ஆஃப் சென்ற குஜராத்: 7 அணிகள் 3 இடங்கள்: சிஎஸ்கே, மும்பை, ஆர்ஆர், ஆர்சிபி நிலை என்ன?

By Rsiva kumar  |  First Published May 17, 2023, 6:44 PM IST

குஜராத் டைட்டன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக சென்ற நிலையில், 3 இடங்களுக்கு 7 அணிகள் போட்டி போடுகின்றன.


ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில், குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. இதையடுத்து புள்ளிப்பட்டியலில் மீதமுள்ள 3 இடங்களுக்கு 7 அணிகள் கடும் போட்டி போடுகின்றன. எந்தெந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கா? இல்லையா என்று பார்க்கலாம்.

பழிக்கு பழி வாங்குமா இல்லை பஞ்சாப்பின் பிளே ஆஃப் சுற்றுக்காக விட்டுக் கொடுக்குமா டெல்லி?

Tap to resize

Latest Videos

சென்னை சூப்பர் கிங்ஸ்:

13 போட்டிகள் – 15 புள்ளிகள் – ரன்ரேட் – 0.381

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை தோற்றது, சென்னை அணியை இன்னமும் 2ஆவது இடத்திலேயே நீடிக்க வைத்துள்ளது. சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் எந்த அணி 2ஆவது இடம் பிடிக்கும் என்று தீர்மானிக்கப்படும்.

கங்குலிக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுத்து அவரது பாதுகாப்பை பலப்படுத்திய மேற்கு வங்க அரசு!

கடைசி போட்டியில் சென்னை 10 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தால், லக்னோ 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற் வேண்டும். அப்படி ஜெயித்தல் ரன்ரேட் அடிப்படையில் லக்னோ 2ஆவது இடம் பெறும். டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை தோற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு இழக்க நேரிடும். மேலும், மற்ற அணிகளின் புள்ளி மற்றும் ரன்ரேட் அடிப்படையில் தான் சென்னையின் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.

லக்னோ கொடுத்த அதிர்ச்சி:புதிய சிக்கலில் சிஎஸ்கே: பிளே ஆஃப் செல்லுமா சென்னை?

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

13 போட்டிகள் – 15 புள்ளிகள் – ரன்ரேட் – 0.304

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ வெற்றி பெற்று, சென்னை கடைசி போட்டியில் தோற்றால் லக்னோவின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்படும். இல்லையென்றால் லக்னோ மற்றும் சென்னை இரு அணிகளும் 17 புள்ளிகள் பெற்றால் நெட் ரன்ரேட் அடிப்படையில் அணியின் 2ஆவது இடம் தீர்மானிக்கப்படும்.

லக்னோ மற்றும் சென்னை அணிகள் கடைசி போட்டியில் தோற்றால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் இந்த இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும்.

தெரு நாய் கடித்து அர்ஜூன் டெண்டுல்கர் காயம்: பந்து வீச முடியாமல் அவதி!

மும்பை இந்தியன்ஸ்:

13 போட்டிகள் – 14 புள்ளிகள் – ரன்ரேட் – -0.128

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு சென்றிருக்கும். எனினும், எஞ்சிய போட்டியில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெறும். அதோடு, ஆர்சிபி, பஞ்சாப் அணிகளும் எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 16 புள்ளிகள் பெறும்.

ஆர்சிபி, சிஎஸ்கே, லக்னோ, மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் எஞ்சிய போட்டிகளில் தோற்று மும்பை வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.

10 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய தந்தைக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறேன் - மோசின் கான்!

பஞ்சாப் கிங்ஸ்:

பஞ்சாப் கிங்ஸ் எஞ்சிய 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெறும். இதையடுத்து மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்து பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ஆர்சிபி எஞ்சிய 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெறும். நெட் ரன் ரேட்டும் வைத்திருக்கிறது. ஆதலால் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

எஞ்சிய போட்டியில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஆர்சிபி ஒரு போட்டியில் வெற்றி பெற்று மற்றொரு போட்டியில் தோல்வி அடைந்தாலும், மும்பை எஞ்சிய போட்டியில் தோல்வி அடைந்து எஞ்சிய போட்டியில் கேகேஆர் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்  கேகேஆருக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.

click me!