கங்குலிக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுத்து அவரது பாதுகாப்பை பலப்படுத்திய மேற்கு வங்க அரசு!

By Rsiva kumarFirst Published May 17, 2023, 3:18 PM IST
Highlights

முன்னாள் பிசிசிஐ தலைவரான சவுரங் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பை மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்று வாய்ப்புக்காக போராடி வருகின்றன. ஏற்கனவே டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், பஞ்சாப் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திற்கு முன்னேறும்.

லக்னோ கொடுத்த அதிர்ச்சி:புதிய சிக்கலில் சிஎஸ்கே: பிளே ஆஃப் செல்லுமா சென்னை?

தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் நிர்வாக இயக்குநராக சவுரவ் கங்குலி இடம் பெற்றிருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி, முன்னாள் பிசிசிஐ தலைவருமாக இருந்துள்ளார். இந்த நிலையில், கங்குலியின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த Y பிரிவிலிருந்து Z’ பிரிவுக்கு மேம்படுத்த மேற்கு வங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் இந்த பாதுகாப்பு வழங்கப்பட இருக்கிறது.

தெரு நாய் கடித்து அர்ஜூன் டெண்டுல்கர் காயம்: பந்து வீச முடியாமல் அவதி!

இதுவரையில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த Y பிரிவு பாதுகாப்பு காலாவதியான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய பாதுகாப்பு விதிமுறையின் படி கங்குலிக்கு 8 முதல் 10 போலீசார் பாதுகாவலர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

10 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய தந்தைக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறேன் - மோசின் கான்!

click me!