மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான 63ஆவது போட்டி நேற்று லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய லக்னோ அணிக்கு குர்ணல் பாண்டியா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் நல்ல ஸ்கோர் எடுத்துக் கொடுத்தனர்.
தெரு நாய் கடித்து அர்ஜூன் டெண்டுல்கர் காயம்: பந்து வீச முடியாமல் அவதி!
இதன் காரணமாக 3 விக்கெட் இழப்பிற்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்றது. இதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திற்கு சென்றது.
10 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய தந்தைக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறேன் - மோசின் கான்!
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 15 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேறியது. ஆனால், 15 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2ஆவது இடத்தில் உள்ளது. லக்னோ மற்றும் சென்னை இரு அணிகளும் 15 புள்ளிகளுடன் இருப்பதால், ரன்ரேட் அடிப்படையில் சென்னை தான் அதிக ரன்ரேட் வைத்துள்ளது.
தவறான ஷாட் அடிக்க போய் கிளீன் போல்டான சூர்யகுமார் யாதவ்: வைரலாகும் வீடியோ!
ஆனால், அடுத்து டெல்லிக்கு எதிராக நடக்க கூடிய போட்டியில் கண்டிப்பாக சென்னை வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும். இதே போன்று லக்னோ அணியும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் இரு அணிகளின் ரன்ரேட் அடிப்படையில் 2ஆவது இடம் யாருக்கு என்று நிர்ணயிக்கப்படும். ஒருவேளை சென்னை தோற்றால் வெளியேறும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.